ETV Bharat / bharat

புதுச்சேரியில் புதிதாக கட்டப்படும் கலாசார மையத்தை ஆய்வுசெய்த அமைச்சர்!

புதுச்சேரி: சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பில் கடற்கரையில் கட்டப்பட்டுவரும் கலாசார மையத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வுசெய்தார்.

author img

By

Published : Oct 10, 2020, 8:08 PM IST

அமைச்சர்
அமைச்சர்

புதுச்சேரி கடற்கரை சலையின் வடக்குப் பகுதியில் பிரெஞ்சு காலத்தில் சாராய ஆலை ஒன்று இயங்கிவந்தது. இந்த ஆலை மூடப்பட்டதால் அந்தக் கட்டடம் தற்போது பயனற்றுப்போனது. அங்கு புதிதாக கலாசார மையம் அமைக்கும் பணிகளை சுற்றுலாத் துறை செய்துவருகிறது.

சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுவரும் இந்த மையத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

கலாசார பரிமாற்றம் நிகழ்வுகளுக்கு நாடு முழுவதுமிருந்து வரும் கலைஞர்களும், வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் தங்குவதற்காக கடற்கரை நோக்கும் வகையில் 16 அறைகள் தயாராகிவருகின்றன.

உணவகம், யோகாசனமும் தியானமும் செய்வதற்காக தனிக் கூடம், உடற்பயிற்சிக் கூடம், திறந்தவெளி அரங்கம், நடன கூடம், 200 பேர் அமரக்கூடிய சிறிய திரையரங்கம் ஆகியவை 2 ஏக்கரில் அமைக்கப்பட்டுவருகிறது.

கலாசார மையத்தை ஆய்வுசெய்த அமைச்சர்!

இந்த மையத்தின் பணிகளை விரைவாக முடித்து வரும் பிப்ரவரி மாதத்திற்குள் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது சுற்றுலாத் துறை திட்ட மேலாளர் ராமன், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:குமரியில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க எம்எல்ஏ பிரின்ஸ் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.