ETV Bharat / bharat

கரோனா மருத்துவமனையில் கழிவறையை சுத்தம் செய்த அமைச்சர்! - Toilet Cleaning Equipment

புதுச்சேரி: கரோனா மருத்துவமனை கழிவறையை நவீன கருவியைக் கொண்டு சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சுத்தம் செய்தார்.

Minister Malladi Krishna Rao Cleans Toilet

author img

By

Published : Sep 19, 2020, 1:35 AM IST

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு கரோனா மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்கு ஆக்சிஜன் கருவிகள் அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும், கரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களிடம், சிகிச்சை முறை, மருந்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்தார். அங்கு உள்ள கழிவறைகளை சுத்தப்படுத்த, வாங்கப்பட்டுள்ள புதிய கருவியைக் கொண்டு கழவறைகளைச் சுத்தப்படுத்தினார்.

இதையடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இதுபோன்ற கழிப்பறைகளை சுத்தப்படுத்தும் நவீன கருவிகளை வாங்கி பயன்படுத்துமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.