டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்ததிலிருந்தே, அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தலைநகரைக் கைப்பற்ற ஆம் ஆத்மி கட்சியும் இரு தேசிய கட்சிகளும் திட்டம் தீட்டிவருகின்றன. இந்தத் தேர்தலில் குடியுரிமை திருத்தச் சட்டம் முக்கியக் காரணியாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டம், ஜே.என்.யூ. மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் என அனைத்தும் தேர்தல் பரப்புரையில் முக்கியப் பங்காற்றும் என்றும் கூறப்படுகிறது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஷாகீன் பாக் என்ற இடத்தில் தற்போதுவரை போராட்டம் நடந்துவருகிறது.
இந்நிலையில், டெல்லி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா கூறிய கருத்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரா, ”டெல்லியில் ஆங்காங்கே ’குட்டி பாகிஸ்தான்கள்’ உருவாகியுள்ளன. ஷாகீன் பாக், இந்தர் லோக், சந்த் பாக் ஆகிய பகுதிகள்தான் குட்டி பாகிஸ்தான்களாக உருவாகியுள்ளன. அங்கு சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராடுகிறேன் என்ற பெயரில் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கின்றனர். மனீஷ் சிசோடியா போன்றவர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்துவருகின்றனர்.
-
𝗜𝗻𝗱𝗶𝗮
— Kapil Mishra (@KapilMishra_IND) January 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝘃𝘀
𝗣𝗮𝗸𝗶𝘀𝘁𝗮𝗻
8𝘁𝗵 𝗙𝗲𝗯𝗿𝘂𝗮𝗿𝘆
𝗗𝗲𝗹𝗵𝗶
8 फरवरी को दिल्ली की सड़कों पर हिंदुस्तान और पाकिस्तान का मुकाबला होगा
">𝗜𝗻𝗱𝗶𝗮
— Kapil Mishra (@KapilMishra_IND) January 23, 2020
𝘃𝘀
𝗣𝗮𝗸𝗶𝘀𝘁𝗮𝗻
8𝘁𝗵 𝗙𝗲𝗯𝗿𝘂𝗮𝗿𝘆
𝗗𝗲𝗹𝗵𝗶
8 फरवरी को दिल्ली की सड़कों पर हिंदुस्तान और पाकिस्तान का मुकाबला होगा𝗜𝗻𝗱𝗶𝗮
— Kapil Mishra (@KapilMishra_IND) January 23, 2020
𝘃𝘀
𝗣𝗮𝗸𝗶𝘀𝘁𝗮𝗻
8𝘁𝗵 𝗙𝗲𝗯𝗿𝘂𝗮𝗿𝘆
𝗗𝗲𝗹𝗵𝗶
8 फरवरी को दिल्ली की सड़कों पर हिंदुस्तान और पाकिस्तान का मुकाबला होगा
எப்போது பாகிஸ்தானை இந்தியாவில் உருவாக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்தியா இன்னும் ஒரு அடி உயர்ந்தே நிற்கும். பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறும் தேர்தல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் போட்டியாக இருக்கும்” என்றார்.
இதனை தனது ட்விட்டர் பதிவுகளிலும் கபில் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இளைஞர்கள் போராடுவதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் - அமித் ஷா குற்றச்சாட்டு