ETV Bharat / bharat

உணவிற்கு வழியில்லை... குடிபெயர்ந்த தொழிலாளர் தற்கொலை! - நிதி நெருக்கடியில் புலம் பெயர் தொழிலாளி தற்கொலை

கோண்டா: நிதி நெருக்கடியில் சிக்கிய குடிபெயர்ந்த தொழிலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உணவிற்கு வழியில்லை...புலம் பெயர் தொழிலாளர் தற்கொலை!

author img

By

Published : May 22, 2020, 7:26 PM IST

டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் பமுரா என்ற கிராமத்திற்கு தன் மனைவியுடன் வந்த குடிபெயர்ந்த தொழிலாளர் தற்கொலை செய்து கொண்டார். இவர் டெல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தினக்கூலியாக வேலை செய்து வந்தவர். சமீபத்தில் அவருடைய மனைவியுடன் சொந்த ஊர் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்நபரின் உறவினர், “கரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து வீடு திரும்பிய அவர்களுக்கு, உணவு பற்றாக்குறை இருந்தது. இந்நிலையில், அவருடைய மனைவிக்கும், அவருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.

இது குறித்து காவல் ஆய்வாளர் அதுல் சதுர்வேதி, “வீட்டுத் தனிமையில் ( home quarantine) இருந்த இத்தம்பதியினர், ஊருக்கு வெளியே குடிசை அமைத்து வாழ்ந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியின் நிமித்தம் மனைவிக்கும் இவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால், மனமுடைந்த இளைஞர், மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தற்போது, அவருடைய உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது” என்றார்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் சுவர் இடிந்து விழுந்து மூவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.