காஷ்மீரில் சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவற்றை இந்தியா அரசு நீக்கிய பின், அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் நம் நாட்டிற்கும் இடையில் அமைதியான சூழல் நிலவவில்லை. இதனால் காஷ்மீரில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை, மெல்ல மெல்லத் திரும்பும் காஷ்மீரில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதனைத்தொடர்ந்து அனைத்து நடுநிலைப்பள்ளிகளையும், வரும் புதன்கிழமை திறக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் மாணவர்கள் இனி மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.