இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ள உள்துறைச் செயலர் அஜய் பல்லா, ”சாலைகளிலும் ரயில் நிலையங்களிலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடமாடுவதால் அவர்களுக்கு உரிய முறையில் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
பேருந்துகளையும், ரயில்களையும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், நடந்துசெல்ல வேண்டிய அவசியம் இல்லை என அவர்களுக்கு விளக்க வேண்டும். அவர்களின் பயணங்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு வசதிகள் செய்துதர வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்ப திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
நடந்து செல்வோரை அருகிலுள்ள அரசு முகாம்களுக்கு அழைத்துச் சென்று உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளைச் செய்துதர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.