சமீபத்தில் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதற்கிடையே, ராணுவ வீரர்கள் சீன செயலிகளை பயன்படுத்துவதன் மூலம் தகவல்கள் திருடப்படுவதாகப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதைக் கருத்தில் கொண்டு, ராணுவ வீரர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சீன செயலிகளைப் பயன்படுத்தத் தடை விதித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், " சிஆர்பிஎஃப், ஐடிபிபி, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப், ஐடிபிபி,என்எஸ்ஜி உள்ளிட்ட அனைத்து துணை ராணுவப் படையினரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட செயலிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, பல முன்னாள் ராணுவ வீரர்கள், ராணுவ படை வீரர்களுடன் தொடர்பில் இருப்பதால் தகவல் கசிய வாய்ப்புள்ளதால் அவர்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்தத் தடையை எதிர்த்து ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் லெப்டினன்ட் கர்னல் பி.கே. சவுத்ரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.