இந்தியா முழுவதும் செயல்பட்ட 27 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 12ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்ததில் இருந்தே வங்கி ஊழியர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. இதையடுத்து, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் கனரா வங்கி, சின்டிகேட் வங்கி இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கங்கள் எழுப்பப்பட்டது. இதேபோல், குஜராத் மாநிலம் காந்தி நகரில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். வங்கிகளின் இணைப்பால் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.