ETV Bharat / bharat

நோயைக் குணப்படுத்துவதற்கு முன்பு மருத்துவச் செலவுகளைக் குறைக்க வழி என்ன? - Diseases of the middle class

மும்பை: இந்தியாவில் நடுத்தர குடும்பத்தை பாதிக்கும் கொடிய நோய்களைப் போக்க நாம் செய்ய வேண்டிய கடமைகளை என்ன என்பதை விவரிக்கிறது இத்தொகுப்பு...

heart attack
heart attack
author img

By

Published : Dec 31, 2019, 8:47 AM IST

ஒருவர் உடல் நலம் சரியில்லாமல்போவதை காண்பதற்கே மனம் படபடத்து போகிறது. ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், அந்தக் குடும்பம் படும் இன்னல்களையும் துன்பங்களையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மருத்துவமனையை விட்டால் வீடு என்று நிலை உருவாகும்போது அந்தக் குடும்பம் துன்பத்தில் மட்டுமல்ல மருத்துவச் செலவுகளை தாங்க முடியாமல் கடனில் மூழ்கும் அபாய நிலையும் ஏற்படும்.

பணத்தில் கொழிக்கும் மருந்துகள்
பணத்தில் கொழிக்கும் மருந்துகள்

அடுத்த பத்து ஆண்டுகளில் உயர்ந்து வரும் சுகாதாரம் தொடர்பான செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியா போன்ற வளரும் நாடுகளை இது பெரிதும் பாதிக்கும். மக்கள் பிரச்னைக்கு தீர்வுகள்தான் என்ன? இதை எப்படி சமாளிப்பது? நோய்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எப்படிப்பட்ட தடுப்பு முறைகளை கையாள வேண்டும்? என்ற விழிப்புணர்வே இல்லாத நிலைதான் தொடர்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலுள்ள 7 விழுக்காடு குடும்பங்கள் மருத்துவச் செலவுகளுக்காக கடன்பட்டு ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் மருத்துவச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் 5.5 விழுக்காடு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது அறை கூவல்:

1. தற்போது வயது வித்தியாசமின்றி கொடிய நோய்களான மாரடைப்பும் புற்றுநோயும் உலகம் முழுக்க உள்ள மக்களை பெருமளவில் பாதித்துவருகின்றன.

2. உயர் மருத்தவச் சிகிச்சைக்கான செலவினங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளன.

3. மருந்து செலவுகளும் மருத்துவப் பரிசோதனை செலவுகளும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டுவருகின்றன. மருத்துவச் செலவுகளில் 52 விழுக்காடு மருந்துகளுக்காகவே செலவிடப்படுகின்றன.

4. மூத்த குடிமக்கள் தொடர்ந்து மருந்துகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மருத்துவப் பாதுகாப்பிற்கான செலவும் உயர்ந்துவருகிறது.

நடுத்தர குடும்பத்தினரை பயமுறுத்தும் வகை
நடுத்தர குடும்பத்தினரை பயமுறுத்தும் வகை

பிரிட்டனில் பணிபுரிந்த ஒரு இந்திய மருத்துவரிடம் இந்தியாவில் வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைக்கும், பிரிட்டனில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி வினவியபோது, அவரது பதில் வியக்கும் வைக்கும் விதமாக இருந்தது. பிரிட்டனில் ஒரு நோயாளி மருத்துவரிடம் வரும்போது அந்த மருத்தவர் நோயாளியின் நோயைக் கண்டுபிடிக்க வேண்டி தன் கவனம் முழுவதையும் அவருக்கு வழங்க வேண்டிய சிகிச்சை முறைகளிலும், அதற்கான மருத்துவப் பரிசோதனைகளிலும் செலுத்தி நோயை முழுமையாக கண்டுபிடித்துவிடுவார்.

ஆனால் இந்தியாவிலுள்ள மருத்துவர் ஒரு நோயாளியைப் பரிசோதனை செய்யும்போது, அவரது எண்ணம் முழுக்க நோயாளியின் குடும்ப பொருளாதார நிலையையும், மருத்துவப் பரிசோதனைக்கான செலவுகளை அவர்களால் தாங்க முடியுமா என்பதை பற்றியுமே இருக்கும். அதுபோலவே அந்த நோயாளிக்கு அரசு வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ள வைக்க முடியுமா என்றும் சிந்திக்கத் தொடங்குவர். இதுவே இரண்டு நாடுகளிலும் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளின் பாரிய வேறுபாடு என அந்த மருத்துவர் தெரிவிக்கிறார்.

இதயத்தை காக்கும் மருத்துவர்கள்
இதயத்தை காக்கும் மருத்துவர்கள்

இந்தியாவிலுள்ள 70 விழுக்காடு நோயாளிகள் எந்தவித மருத்துவக் காப்பீட்டின் கீழும் வராத நிலையில் மருத்துவச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளையே நாடவேண்டிய நிலையுள்ளது.

மருத்துவக் காப்பீடு

அசாதாரணமாக உயர்ந்து வரும் மருத்துவச் செலவினங்களைச் சமாளிக்க நமக்கு இருக்கும் ஒரே வழி மருத்துவக் காப்பீடு மட்டுமே. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 2.07 கோடி மக்கள் மருத்துவக் காப்பீடு சந்தாதாரர்கள் மட்டுமே உள்ளனர். பயனாளர்கள் 47.20 கோடி மக்கள். இப்பயணாளர்களின் மருத்துவச் செலவுகளை அரசு அல்லது தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் பொறுப்பேற்றுக் கொள்கின்றன. மீதம் உள்ள 80 கோடி மக்கள் எந்தவிதமான மருத்துவக் காப்பீடுகளும் இல்லாமலேயே உள்ளனர்.

இவர்களில் பலர் மருத்துவக் காப்பீடு கட்டணத்தை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செலுத்துகின்றனர். இத்தகைய காப்பீடு கட்டணங்களை இவர்கள் தங்கள் சொந்த பணத்தைக் கொண்டு செலுத்தவேண்டியுள்ளதால் அவர்களால் தொடர்ந்து செலுத்த முடிவதில்லை.

தற்போதைய நிலை: (பல்வேறு புள்ளி விவரங்கள் அடிப்படையில்)

  • 2000 - 2014 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலங்களில் மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் 370 விழுக்காடு உயர்வு.
  • அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் எத்தனை நூறு மடங்கு உயரும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
  • மருத்துவச் செலவுகளை பல்வேறு நாட்டு அரசுகள் எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்பதை காண்போம்.
    நுரையீரல் பாதிப்பு
    நுரையீரல் பாதிப்பு
  • பிரிட்டன் - 83 விழுக்காடு, சீனா - 56 விழுக்காடு, அமெரிக்கா - 48 விழுக்காடு, பிரேசில் - 46 விழுக்காடு, இந்தோனேசியா - 39 விழுக்காடு, இந்தியா - 30 விழுக்காடு.

மற்ற நாடுகளில் மக்களே முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளில் மருத்துவச் செலவுகளை தாங்களே ஏற்றுக்கொள்ளும் சக்தி கொண்ட மக்களின் விழுக்காடு என்ன என்பதையும் காண்போம்.

அமெரிக்கா 13.4 விழுக்காடு , பிரிட்டன் 10 விழுக்காடு, சீனா 13.4 விழுக்காடு ஆகும். ஆனால் இந்தியாவில் 62 விழுக்காடு, இதற்கு காரணம் போதுமான மருத்துவக் காப்பீடு இல்லாததும், அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படாததுமேயாகும்.

Intro:Body:

நோயை குணப்படுத்துவதற்கு முன்பு மருத்துவ செலவுகளை தீர்ப்போம்

ஒருவர் உடல் நலம் குன்றியிருப்பதை காண நமது மனம் வேதனையடைகிறது. அதேநபர் தனது மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்கபடும் துன்பங்களை காணும்போது நமது மனம் மேலும் வேதனையடைகிறது. ஒருவர் சிகிச்சைக்காக மருத்தவமனை செல்ல நேர்ந்தாலே அவரது இதயம் கட்டுக் கடங்காமல் துடிக்கிறது. மருத்துவ செலவுகளை தாங்க முடியாத குடுமபங்கள் கடனில் மூழ்குகின்றன. தொடர்ந்து, உயர்ந்து வரும் மருந்து விலைகளும் மருத்துவர் கட்டணங்களும், மருத்துவ பரிசோதனை கட்டணங்களும், மருத்துவமனை செலவுகளும் நடுத்தரவர்க்க மக்களை பெரிதும் பாதிக்கின்றன. அடுத்த பத்து ஆண்டுகளில் உயர்ந்து வரும் சுகாதாரம் தொடர்பான செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இத்தகைய செலவுகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளை பெரிதும் பாதிக்கும். இந்த அதி அவசரமான மக்கள் பிரச்னைக்கு தீர்வுகள் தான் என்ன? இதை எப்படி சமாளிப்பது? நோய்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எப்படிப்பட்ட தடுப்பு முறைகளை கையாள வேண்டும்?

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள 7% குடும்பங்கள் மருத்துவ செலவுகளுக்காக கடன்பட்டு ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் மருத்துவ செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் 5.5% உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இரண்டாவது அறை கூவல்:

1. தற்போது வயது வித்தியாசமின்றி கொடிய நோய்களான மாரடைப்பும், கேன்சரும்  உலகம் முழுக்க உள்ள மக்களை பெருமளவில் பாதித்து வருகின்றன. 

2. உயர் மருத்தவ சிகிச்சைக்கான செலவினங்கள் பன் மடங்கு உயர்ந்து உள்ளன.

3. மருந்து செலவுகளும், மருத்துவ பரிசோதனை செலவுகளும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டு வருகின்றன. மருத்தவ செலவுகளில் 52% மருந்துகளுக்காகவே செலவிடப்படுகின்றன.

4. மூத்த குடிமக்கள் தொடர்ந்து மருந்துகளை பயன்படுத்துவதால் அவர்களின் மருத்துவ பாதுகாப்பிற்கான செலவும் உயர்ந்து வருகிறது.

ஒருவர் நோயின்றி உடல்நலத்துடன் இருக்கும் வரை எல்லாம் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் அதே நபர் நோய்வாய்ப்படும்போது பிரச்சினை ஆரம்பிக்கிறது. மருத்துவரின் ஆலோசனை கட்டணங்கள், பரிசோதனைக்கட்டணங்கள், சிகிச்சை செலவுகள், மருந்து செலவுகள் முதலியவை மொத்த குடும்பத்தையே மீளமுடியாத கடன் என்ற நரகத்தில் தள்ளி விடுகின்றன. 20%   நோயாளிகளும் அவரது குடும்பத்தாரும் தங்கள் குடும்ப சொத்தில் பாதியை விற்றே மருத்துவ செலவுகளை சமாளிக்க வேண்டியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் எதிர்பார்க்ககூடிய மருத்துவ சூழல் செலவினங்களை மேலும் கடுமையாக்கும். தற்போதைய சூழல் செலவினங்களை மேலும் கடுமையாக்கும். தற்போதைய தலைமுறையின் மிகப்பெரிய சவால் இத்தகைய கடுமையான பேராபத்தை மிகக்குறைந்த சேதாரங்களோடு சமாளிப்பது தான்.

பிரிட்டனில் பணிபுரிந்த ஒரு இந்திய மருத்துவரிடம் இந்தியாவில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கும், பிரிட்டனில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி வினவிய போது அவரது பதில் வியக்கும் படியாக இருந்தது. பிரிட்டனில் ஒரு நோயாளி மருத்துவரிடம் வரும்போது இந்த மருத்தவர் நோயாளியின் நோயை கண்டுபிடிக்க வேண்டி தன் கவனம் முழுவதையும் அவருக்கு வழங்க வேண்டிய சிகிச்சை முறைகளிலும் அதற்கான மருத்துவ பரிசோதனைகளிலும் செலுத்தி நோயை முழுமையாக கண்டுபிடித்துவிடுவார். ஆனால் இந்தியாவில் உள்ள மருத்துவர் ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும்போது அவரது எண்ணம் முழுக்க நோயாளியின் குடும்ப பொருளாதார நிலையையும்,  சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கான செலவுகளை அவர்களால் தாங்க முடியுமா என்பது பற்றியுமே இருக்கும். அதுபோலவே அந்த நோயாளிக்கு அரசு வழங்கும் மருத்துவ காப்பீட்டுத்திட்டங்களின் மூலம் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்ள வைக்க முடியுமா என்றும் சிந்திக்கத்தொடங்குவர். இதுவே இரண்டு நாடுகளிலும் வழங்கப்படும் மருத்துவ சேவைகளின் மிகப்பெரிய மருத்துவ வேறுபாடு என அந்த மருத்துவர் கூறினார். பிரிட்டனில் பணிபுரியும் இந்த மருத்துவரின் பதிலானது இந்திய மருத்துவதுறையின் செயல்பாடுகளை மக்கள் முன் மிக தெளிவாக எடுத்து வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள 70% நோயாளிகள் எந்தவித மருத்துவ காப்பீட்டின் கீழும் வராத நிலையில் மருத்துவ  சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளையே நாடவேண்டியுள்ளது.

டெங்கு போன்ற நோய்களுக்கு சிகிச்சை எடுக்கும்போது கூட மருத்தவ செலவுகளை தாங்க முடியாமல் கடன் சுமையால் பாதிக்கப்படுகிறார்கள்.

நாம் என்னதான் செய்வது?

உயர்ந்து வரும் மருத்துவ செலவுகளை சமூகத்தின் மேல்தட்டு வர்க்கமான பணக்காரர்கள் எந்த வித சிரமும் இன்றி சமாளித்து விடுகின்றார்கள். அது போலவே கீழ்த்தட்டு மக்களான ஏழைகள் அரசுதிட்டங்களான ஆரோக்யாசிரி, ஆயுஷ்மான் பாரத் போன்றவற்றாள் மருத்துவ செலவுகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். மறுபுறம் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ செலவுகளை ஈடுசெய்யும் திட்டங்கள் முதலியவை உதவுகின்றன. ஆனால் சமூகத்தின் மத்திய தரவர்க்கத்தின் நோயாளிகளின் நிலை மோசமானது. அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை சந்திக்க எந்த உதவியோ, திட்டங்களோ கிடையாது. இந்த பின்னணியில் வரும் பத்தாண்டுகளில் உயரக்கூடிய மருத்துவ செலவுகளை சமாளிக்கும் வழி முறைகளை கண்டறிதல் வேண்டும். 

சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு

                 பாதுகாப்பான சுகாதாரம் பற்றிய உயரிய விழிப்புணர்வு நம்மை நோய்நொடிகளிலிருந்து காப்பாற்றும். ஆகவே நம் ஒவ்வொருவருக்கும் சுகாதாரம், சத்துணவு, தினசரி உடற்பயிற்சி, உடல்நலம் பேணுதல் பரவலாக காணப்படும் நோய்களிலிருந்து தற்காப்பு பற்றிய உயரிய புரிதல் வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு குழந்தை பருவத்திலிருந்தே கொடுக்கப்பட வேண்டும்.

மருத்தவ பரிசோதனைகளை முந்தி செய்தல்

ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் நோய் தாக்குதல்களை கண்டுபிடித்து நம்மை பாதுகாப்பதானது நோயை கண்டுபிடித்த பிறகு பல மருத்துவமனைகளை நாடி ஓடுவதைவிட சிறந்ததாகும். இவ்வாறு முந்தி செய்யக்கூடிய பரிசோதனைகள் மூலம் நம்மை கேன்சர் போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். இவ்வாறு மருத்துவ பரிசோதனைகளை முந்தி செய்தல் என்பது அரசு பதவியில் உள்ளோர் குடும்பங்களிலும் கற்றோர் உள்ள குடும்பங்களிலும் மட்டுமே நடைபெறுகிறது. ஆனால் இவை ஒவ்வொரு ஏழைக்குடும்பத்திலும் நடக்கக்கூடிய வழிவகைகள் செய்தல் வேண்டும்.

மருத்து காப்பீடு

அசாதாரணமாக உயர்ந்து வரும் மருத்துவ செலவினங்களை சமாளிக்க நமக்கு இருக்கும் ஒரேவழி மருத்துவ காப்பீடு மட்டுமே. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 2.07 கோடி மருத்துவ காப்பீடு சந்தாதாரர்கள் மட்டுமே உள்ளனர். பயனாளர்கள் 47.20 கோடி மக்கள். இப்பயணாளர்களின் மருத்துவ செலவுகளை அரசு அல்லது தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் பொறுப்பேற்றுக் கொள்கின்றன.  மீதம் உள்ள 80 கோடி மக்கள் எந்தவிதமான மருத்துவ காப்பீடுகளும் இல்லாமலேயே உள்ளனர். இவர்களில் பலர் மருத்துவ காப்பீடு கட்டணத்தை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செலுத்துகின்றனர். இத்தகைய காப்பீடு கட்டணங்களை இவர்கள் தங்கள் சொந்தப் பணத்தைக்கொண்டு செலுத்த வேண்டி உள்ளதால் அவர்களால் தொடர்ந்து செலுத்த முடிவதில்லை. ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இவர்கள் செலுத்தும் மருத்துவ காப்பீடு கட்டணம் மிகவும் குறைவானதேயாகும்.

இதுவே நமது தற்போதைய நிலை

 (பல்வேறு புள்ளி விவரங்கள் அடிப்படையில்)

* 2000 - 2014 இடையே மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் 370% உயர்வு 

* அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் எத்தணை நூறு மடங்கு உயரும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

*மருத்துவ செலவுகளை பல்வேறு நாட்டு அரசுகள் எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்பதை காண்போம்.

           - பிரிட்டன் 83%,   சீனா 56%,  அமெரிக்கா 48%, பிரேசில் 46%,  இந்தோனிசியா 39%, இந்தியா 30%

(மற்ற நாடுகளில் மக்களே முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.) 

*பல்வேறு நாடுகளில் மருத்துவ செலவுகளை தாங்களே ஏற்றுக்கொள்ளும் சக்தி கொண்ட மக்களின் சதவீதம் என்ன என்பதை காண்போம்.

               - அமெரிக்கா 13.4% , பிரிட்டன் 10%, சீனா 13.4%  இந்தியா 62% 

(இதற்கு காரணம் போதுமான மருத்து காப்பீடு இல்லாததும், மருத்துவ காப்பீடு அனைத்து விதமான நோய்களுக்கும் காப்பீடு வழங்கப்படாததுமாகும்.)

*கடந்த ஆண்டு இந்திய அரசு ஒவ்வொரு இந்தியரின் மருத்துவ செலவிற்காக சராசரியாக ரூ. 1657 ஒதுக்கியது.

*கடந்த ஆண்டு மருத்துவ செலவுகளை தம் சொந்த வருமானத்தில் ஏற்றுக்கொண்டவர்களின் சராசரி செலவு ரூ.31,845.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.