ETV Bharat / bharat

தேர்தல் முடிவுகள் எதிரொலி: முறிகிறது மாயாவதி - அகிலேஷ் கூட்டணி?

லக்னோ: மக்களவைத் தேர்தலில் மாயாவதி - அகிலேஷ் யாதவ் அமைத்த மெகா கூட்டணி படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அவர்களின் கூட்டணி முறிவை நோக்கி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

author img

By

Published : Jun 4, 2019, 8:11 AM IST

mayawati

மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னர் உத்தரப் பிரதேச அரசியலின் திடீர் திருப்பமாக அதுவரை எலியும் பூனையுமாக இருந்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியும் - சமாஜ்வாதியும் ‘மகாகத்பந்தன்’ என்ற மெகா கூட்டணியில் கைகோர்த்தன. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் ஒரே மேடையில் கைகோர்த்து நின்று மக்களின் ஆதரவை திரட்டினர்.

ஆனால், இவ்விருவரின் அரசியல் கணக்குகளுக்கு சவுக்கடி விழுந்தாற்போல் தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டது. ஏனெனில், மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 5 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், வாக்கு விழுக்காடு கடந்த மக்களவைத் தேர்தலை காட்டிலும் இந்தமுறை குறைவாகவே அவர்களுக்கு கிடைத்துள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் இருகட்சியினரும் தனித்துப் போட்டியிட்டிருந்தனர். ஆனால், இம்முறை கூட்டணி அமைத்து போட்டியிட்டும் அவர்களால் பழைய வாக்குவங்கிகளை தக்கவைக்கமுடியவில்லை. உத்தரப் பிரதேச மாநிலத்தின் விசித்திரமான இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் நோக்கர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அடுத்து நடைபெற இருக்கும் 11 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மாயாவதி தனித்துப் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தனது கட்சி சீனியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய மாயாவதி, கூட்டணி கட்சிகளை சார்ந்து இல்லாமல் சொந்த கட்சியின் அமைப்புகளை வலுப்படுத்தும் பணியில் ஈடுபடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, மாயாவதியின் இந்த அதிருப்தி நிறைந்த பேச்சுகள் குறித்து பேசிய அகிலேஷ் யாதவ், மாயாவதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தாம் காத்திருப்பதாகவும் அதேசமயம் இருகட்சிகளும் சமூக நீதிக்காக இணைந்து போராடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணி முடிவுரையை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.