கிருஷ்ண ஜெயந்தி வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் மதுராதான் கிருஷ்ணர் பிறந்த இடம் என நம்பப்படுவதால் அங்கு இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மதுராவில் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியை காணவே பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவர்.
வருடந்தோறும் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தியைவிட இந்த வருடம் மதுராவில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்களை கவரும் வண்ணத் தோரணங்களால், பக்தர்கள் நிறைந்த கூட்டத்தினால் மதுராவே கோலாகலம் பூண்டிருக்கிறது.
இதையடுத்து கிருஷ்ணரை அலங்கரிக்கவே பிரேத்யகமாக மும்பையில் இருந்து ஆடைகள் தயாரிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.