மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது, உல்லாஸ் நகர். இந்நகரிலுள்ள ஆறுமாடிக் கட்டடத்தில் திடீரென தீ பற்றியெரிந்தது. நேற்று பிற்பகல் நடந்த இந்த விபத்து அருகிலுள்ள கட்டடங்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கட்டடத்தில் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள பிரியா பேக் ஹவுசிலிருந்து தீ பரவியிருப்பதாகத் தெரிகிறது. இங்கு தோல் மற்றும் ரெசின் பொருட்கள் பிரதானமாக உள்ளதே காரணமாகயிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஆயிரக்கணக்கில் மதிப்புள்ளப் பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன.
இதற்கிடையே, விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் அமைந்திருந்த ரயில் பாதையும் பாதிப்படைந்துள்ளது அப்பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 8 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்க போராடினார்கள். அதிர்ஷ்டவசமாக அங்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: இது 'ரத்தம்' அல்ல 'பால்' - ஃபிளமிங்கோ பறவையின் சிறப்பு காணொலி!