ETV Bharat / bharat

நூற்றாண்டு கண்ட சர்வதேச அமைப்பில் இந்தியாவின் பங்கு - இந்தியா சர்வதேச உறவு

ஹைதராபாத்: சர்வதேச ராஜ ஒத்துழைப்பை வலியுறுத்தும் அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸ் தொடங்கப்பட்டு இன்றுடன் நூற்றாண்டுகள் நிறைவுபெறும் நிலையில், அந்த அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி அசோகி முகர்ஜி எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

LON
LON
author img

By

Published : Jan 10, 2020, 9:29 PM IST

சரியாக நூறாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜனவரி 10ஆம் தேதி நவீன பன்முக ராஜரீக நடவடிக்கைகளுக்குத் தொடக்கமாக அமைந்த லீக் ஆஃப் நேஷன்ஸ் எனப்படும் சர்வதேச அமைப்பு தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் உடைந்த இந்த அமைப்பு, சிறிது காலமே செயல்பட்டாலும் இன்றைய ஐக்கிய நாடுகளின் சபையின் தற்கால நடவடிக்கைகள் பலவற்றுக்கு அடித்தளமாக விளங்கியது. லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பின் அடிப்படை கொள்கையான சர்வதேச ஒத்துழைப்பு அதன் வழித்தோன்றலான ஐ.நா சபையின் கொள்கையாகவும் செயல்படுகிறது. 1946ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லீக் ஆஃப் நேஷன்ஸ் உறுப்பினர்கள் ஜெனிவாவில் ஒன்றுகூடி, அதன் முக்கிய அம்சங்களை ஐ.நா சபைக்கு மாற்ற முடிவெடுத்தனர்.

1919ஆம் ஆண்டு வெர்சாலிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், இந்தியா லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பின் தொடக்க உறுப்பினராக ஆனது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் இருந்த அன்றைய இந்தியா, லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பின் தன்னாட்சி பெறாத ஒரே உறுப்பினராக அப்போது விளங்கியது. இது குறித்து அன்றைய சட்ட வரலாற்று ஆர்வலர்கள் இந்தியாவின் உறுப்பினர் பதவியை முரண்களின் முரண் என்று தெரிவித்தனர். இருப்பினும் இறையாண்மை பொருந்திய மற்ற உறுப்பினர்களைப் போலவே, லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பின் சமமான சட்ட அந்தஸ்தை இந்தியாவும் பெற்றது.

லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பில் இந்தியா அன்று பெற்ற பண்நாட்டு ராஜரீக அடித்தளங்கள், இந்தியாவின் இன்றைய வெளியுறவுக் கொள்கைகளின் இரு முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன.

முதலாவது, அமைதிக்கும் போர் தடுப்பு நடவடிக்கைக்கும் இந்தியா கொண்டுள்ள உறுதி. போருக்கு எதிராக 1927ஆம் ஆண்டு பாரிஸில் செய்யப்பட்ட கெல்லாக் - பிரான்ட் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 15 உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று. இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்ததற்காக அன்றைய அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் கெல்லாக்குக்கு 1929ஆம் ஆண்டு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

இரண்டாவது, சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக இந்தியா உருவாக்கிய பன்முக செயல்பாட்டு நடவடிக்கை. வெர்சாலிஸ் ஒப்பந்தத்தின் போது உருவான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உறுப்பினரான இந்தியா, 1922ஆம் ஆண்டு இந்தியத் தொழிலாளர் அமைச்சகத்துக்கு அங்கீகாரத்தைப் பெற்றது. தற்போது 28 உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பில் உள்ள 10 நிரந்தர உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவின் தட்பவெட்பச் சூழலுக்கு தகுந்தாற்போல் இந்தியத் தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்தும், இந்திய கடல் சார்ந்த வேலையாட்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்தியாவுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியது.

ஃபிரான்ஸ் நாடு முன்னெடுத்த பயங்கரவாதத் தடுப்பு மற்றும் தண்டனை ஒப்பந்தத்தில் லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பிலிருந்து கையெழுத்திட்ட ஒரே நாடு இந்தியா என்பது இதில் சுவையான அம்சம். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய சட்ட வழிவகைகளை உருவாக்கும் இந்த ஒப்பந்தத்தின் கொள்கை, ஐ.நா அமைப்பின் சி.சி.ஐ.டி என்ற சர்வதேச பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைக்கு முன்னோடியாக விளங்கியது.

லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பில் இந்தியா சார்பில் தூதராக இருந்தவர்களில் முக்கியமானவர் சார். அதுல் சாட்டர்ஜீ; 1896ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணித் தேர்வில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்ற அதுல், இந்தியா சார்பில் லண்டனுக்கான நான்காவது தூதுவராகப் பணியாற்றினார். இந்தியாவின் சர்வதேச ராஜரீக நடவடிக்கைக்கான பழமை வாய்ந்த அலுவலகமான லண்டன் அல்ட்விச்சில் உள்ள இந்தியன் ஹவுஸை கட்ட முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இந்திய சார்பில் தலைமை வகித்துச் சென்ற அதுல், ஐநா பொதுச்சபை 1927, சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1933 ஆகியவற்றின் இந்தியாவின் முக்கிய முகமாக விளங்கினார்.

டிசம்பர் 18, 1920 ஆம் ஆண்டு லீக் ஆஃப் நேஷன்ஸ் முதல் கூட்டத்தில் அறிவுசார் ஒத்துழைப்புக்காக சர்வதேச குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அமைப்பில் நிதி மற்றும் உள்துறை தொடர்பான அம்சங்களை முன்னெடுத்த பிரான்ஸ் பின்னாளில் யுனெஸ்கோ அமைப்பின் தலைமையிடத்தை அந்நாட்டின் தலைநகரான பாரிஸில் பெற்றது. சர்வதேச அறிவுசார் ஒத்துழைப்பு குழுவுக்கு 1931-1938 ஆண்டுகளில் இந்தியாவுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் மனிதகுலத்தின் ஒற்றுமை மற்றும் அமைதியை தொடர்ச்சியாக வலியுறுத்தினார். 1946-52களில் யுனெஸ்கோவிற்குத் தலைமை தாங்கிய ராதாகிருஷ்ணன், 1952-62ஆம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராகவும், 1962-67ஆம் ஆண்டு வரை இந்திய குடியரசுத் தலைவராகவும் பணியாற்றினார்.

நூற்றாண்டு பன்னாட்டு ராஜரீக அமைப்பின் முக்கிய நபாரக விளங்கிய இந்தியா, சர்வதேச அமைதி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பை மேற்கொள்கிறது. 2021-22ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமில்லா உறுப்பினர் பதவிக்கும், 2022ஆம் ஆண்டு ஜி - 20 நாட்டின் தலைமை பதவிக்கும் முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் இந்தியா தன்னுடைய ஆக்கப்பூர்வ எண்ணங்களை செயல்படுத்தும் தளத்தை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதையும் படிங்க: 100% மாசற்ற சென்சென் மாநகரம் - மின்சார வாகனங்களால் நிகழ்ந்த புரட்சி!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.