கேரள மாநிலம் கோழிக்கோடு (Kozhikode) பந்திரன்காவு (Pantheerankaav) பகுதியில் ஆலன் சுகெயிப் (Alan Shuhaib) மற்றும் தாக பாஸல் ( Thaha Fasal) ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோழிக்கோடு பகுதியில் மட்டும் 20 பேர் மாவோயிஸ்டுகளாக செயல்படுவது தெரியவந்துள்ளது.
இவர்கள் தங்களின் மாவோயிஸ்ட் சித்தாந்தத்தை பரப்ப இடதுசாரி சித்தாந்தம் கொண்ட கட்சிகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த இரண்டு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், சட்டவிரோத செயல்களில் இருந்து பாதுகாப்பு சட்டப் பிரிவின் கீழ் இவர்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'திருமண பந்தத்தில் இணைந்த மாவோயிஸ்ட் காதலர்கள்'