ETV Bharat / bharat

”பிரதமர் பதவி தேடி வந்தபோது அதனை வேண்டாம் என மறுத்தவர் ராகுல் காந்தி!” - ராகுல் காந்தி

டெல்லி : ”ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பிரதமர் பதவி தேடிவந்த போதும், அதனை வேண்டாம் என மறுத்தவர் ராகுல் காந்தி” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சக்திசின் கோஹில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்
author img

By

Published : Aug 21, 2020, 12:50 PM IST

கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இருப்பினும், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ”ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பிரதமர் பதவி தேடி வந்தபோதும், அதனை வேண்டாம் என மறுத்தவர் ராகுல் காந்தி” என காங்கிரஸ் கட்சியன் மூத்த தலைவர் சக்திசின் கோஹில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உடல்நலத்தை காரணம் காட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பிரதமர் பதவியிலிருந்து விலக மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்து, மன்மோகன் சிங் தனது முழு பதவி காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என ராகுல் அவரிடம் கேட்டு கொண்டார். இது காந்தி குடும்பத்தின் பெருந்தன்மை. அதிகாரத்திற்கு அவர் ஆசைப்படவில்லை. அதேபோல், 1991, 2004 ஆகிய ஆண்டுகளில் பிரதமர் பதவி வேண்டாம் என சோனியா காந்தியும் தெரிவித்தார்" என்றார்.

இதனிடையே, நேரு - காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார். இந்நிலையில், ராகுலின் இந்தக் கருத்தை ஆதரித்துப் பேசியுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரின் ஆலோசனையின்படி நேரு - காந்தி குடும்பத்தைச் சாராதவரை காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மன அழுத்தமா? உணவுப் பழக்கத்தையும் கொஞ்சம் மாத்துங்க பாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.