ETV Bharat / bharat

கரோனாவில் இருந்து குணமடைந்த பெண்ணை பத்திரமாக வீட்டில் சேர்த்த ஓட்டுநர்...! முதலமைச்சர் பாராட்டு

author img

By

Published : Jun 14, 2020, 7:14 PM IST

இம்பால்: கரோனாவில் இருந்து குணமடைந்த பெண் ஒருவரை 100 கி.மீ., தொலைவில் உள்ள அவரது வீட்டிக்கு அழைத்துச் சென்ற பெண் ஓட்டுநருக்கு மணிப்பூர் முதலமைச்சர் விருது வழங்கி கவுரவித்தார்.

கோவிட்-19 யிலிருந்து மீட்கப்பட்ட நபரை 100 கி.மீ தூரத்திலுள்ள மாவட்டத்திற்கு கொண்டு சென்ற பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு விருது

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள அரசு ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தின் ஆம்புலன்ஸ் சேவை, கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த பெண் ஒருவர் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்துவிட்டது.

இந்நிலையில், லெய்பி ஓனம் என்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் தானாக முன்வந்து குணமடைந்த அந்த பெண்ணை, மருத்துவமனையில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள மலைப்பாங்கான மாவட்டத்துக்கு எட்டு மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்து பத்திரமாக அழைத்துச் சென்றார்.

ஓட்டுநர் லெய்பியின் மனிதாபிமான செயல் மற்றும் சேவையை பாராட்டி மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரென் சிங், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை விருதாக வழங்கினார். இரண்டு மகன்களின் தாயான லெய்பி, அவரது குடும்பத்தில் வேலை செய்யும் ஒரே நபர்.

'ஆட்டோ டிரைவர்' என்ற தலைப்பில் அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆவணப்படம், 2015ஆம் ஆண்டில் வெளியாகி, 63ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த சமூக வெளியீட்டு படம் மற்றும் 2017 மகளிர் குரல் இப்போது பார்வையாளர்கள் தேர்வு பிரிவில் சிறந்த குறும்படம் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.