ETV Bharat / bharat

மளிகைப் பொருள்களை வாங்கிவர அனுப்பினால்... மனைவியுடன் வந்த இளைஞன்; அதிர்ச்சியில் தாய்!

author img

By

Published : May 1, 2020, 3:51 PM IST

லக்னோ: மளிகைப் பொருள்களை வாங்கி வர அனுப்பிய மகன், மனைவியுடன் வீட்டிற்கு வந்ததைப் பார்த்த இளைஞரின் தாயார், காவல் துறையிடம் புகார் அளித்தார்.

sds
dsd

ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கியிருந்தாலும், சுவாரஸ்யத்துக்கு எந்த ஒரு பஞ்சமும் இல்லை. குறிப்பாக, திருமணங்கள் புதிய புதிய வடிவங்களில் நடைபெறுகிறது. வீட்டில் திருமணம், வீடியோ கால் திருமணம், சைக்கிள் திருமணம் என்ற பட்டியலில் தற்போது மளிகைக் கடை திருமணமும் இணைந்துள்ளது. அது எப்படிய்யா... மளிகைக் கடையில் மனைவி கிடைக்கும் என்ற கேள்விக்குப் பதிலாக திகழ்கிறது, உத்தரப் பிரதேச இளைஞரின் திருமண கதை.

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞரை, அவரின் தாயார் மளிகை கடைக்குப் பொருள்கள் வாங்கி வர அனுப்பியுள்ளார். அதன் பின்னர், சில மணி நேரத்திற்குப் பிறகு, வீட்டு வாசலில் குரல் ஒன்று கேட்டுள்ளது. வீட்டின் வெளியே சென்ற தாயாருக்கு மகனின் ஒற்றை வார்த்தை, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'இவங்க தான்... உங்கள் மருமகள்' என்ற மகனின் வார்த்தை, தாயாரின் இதயத்தில் பெரிய குண்டையே தூக்கிப் போட்டுள்ளது. இதைக் கடுகு அளவும் ஏற்றுக்கொள்ளாத இளைஞரின் தாயார், காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், "மளிகைக் கடைக்குச் சென்ற மகன் ஊரடங்கு விதிமுறையை மீறி, எங்கேயோ உள்ள ஒரு பெண்ணை மனைவி என வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான். எனக்கு இது யாருனே தெரியாது. இருவரையும் வீட்டிற்குள் விடமாட்டேன்" எனத் தெரிவித்தார், அந்த அப்பாவி தாய்.

இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், "எங்கள் திருமணம் 2 மாதங்களுக்கு முன்னர் ஹரித்வாரில் உள்ள கோயிலில் நடைபெற்றது. லாக் டவுன் அமலில் உள்ள காரணத்தினால், திருமணச் சான்றிதழ் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால், எனது மனைவியை டெல்லியில் உள்ள வீட்டில் தங்க வைத்திருந்தேன். ஆனால், வீட்டின் உரிமையாளர் காலி பண்ணச் சொல்லி அறிவுறுத்தி வந்தார்.

செய்வதறியாது வீட்டில் யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் தான், தாயார் மளிகைப் பொருள்களை வாங்கிவர அனுப்பினார். இச்சமயத்தைப் பயன்படுத்தி, சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த மனைவியை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன்" என்றார்.

இருப்பினும் இளைஞரின் தாயார் தனது முடிவில் மாற்றம் இல்லை எனத் தெரிவித்த காரணத்தினால், தற்போது திருமணம் செய்துகொண்ட தம்பதியை தனியாக வீடு எடுத்து தங்குவதற்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: தனி ஒருவனாக சைக்கிளில் புறப்பட்ட இளைஞன்: மணக்கோலம்பூண்டு டபுள்ஸில் ரிட்டனான கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.