ETV Bharat / bharat

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தவர் தீக்குளிப்பு! - man suicide after continuous loss in online rummy

புதுச்சேரி: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த விஜய்குமார், தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

suic
suic
author img

By

Published : Oct 18, 2020, 7:32 PM IST

புதுச்சேரி அருகேயுள்ள கோர்க்காடு ஏரிக்கரையோரம் பாதி எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரது சடலம் இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காவலர்கள் நடத்திய விசாரணையில், இறந்தவர் அதேக் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது.

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன‌. செல்போன் ரீ-சார்ஜ் செய்யும் கடை நடத்தி வரும் விஜயகுமாருக்கு, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகம் ஆர்வம் இருந்துள்ளது‌.

இவர் ரம்மி விளையாட்டில் நிறைய பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கடன் வாங்கியும் ரம்மி விளையாட்டில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளார்.

இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான விஜயகுமார், நத்தமேடு ஏரிக்கரையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த மங்கலம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.