இணையத்தில் உணவு ஆர்டர் செய்வது தற்போதைய சூழலில் வழக்கமாகிவிட்டது. கணவன் மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் இக்காலத்தில், பலரும் சமையல் செய்ய முடியாமல் உணவை ஆர்டர் செய்கின்றனர். இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் உணவு ஆர்டர் செய்வதை வாடிக்கையாளரிடம் கொண்டுவந்து கொடுப்பதற்கு குறிப்பிட்ட மதத்தினர்தான் வர வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அஜய் குமார் என்பவர் இணையத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த உணவை முடாசர் என்பவர் கொண்டுவந்துள்ளார். உணவு கொண்டுவந்தவர் இஸ்லாமியர் என்பதால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அஜய் குமார். 'உணவை நீ ஏன் கொண்டு வந்தாய், இந்த உணவு எனக்கு வேண்டாம்' என்று அஜய் வாதிட்டுள்ளார். இறுதியில் முடாசரிடம் இருந்து உணவை வாங்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து அஜய் குமார் மீது முடாசர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை அடுத்து அஜய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘வேலையில் சிறியது, பெரியது என்பது கிடையாது’ - ஃபுட் டெலிவரி கேர்ள்!