உத்தரப்பிரதேசத்தின் சாண்ட் கபீர் நகர் மாவட்டத்தில், 40 வயது நபர் ஒருவர், தனது இரண்டு சிறு வயது மகள்களைக் கல்லால், கொலை செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில்; 'பெல்ஹெர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாபெது கிராமத்தில் ஜெயினப் என்பவர், தனது மனைவியை விவாகரத்து செய்து தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கம் உள்ள ஜெயினப் மதுவால் தனது சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மே 24) தனது மகள்களான அல்லுமின் நிஷா (5), ரூபி (3) ஆகியோர் மீது கல்லைப் போட்டுக் கொன்றுள்ளார்' என்றனர்.
தற்போது ஜெயினப் மீது, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 22 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற பெற்றோர் கைது!