உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் மும்பையைச் சேர்ந்த 25 வயது இளைஞரை மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படை கைது செய்தது. உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்போவதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 22) தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது குறித்து உத்தரப் பிரதேச அரசு நடத்திய விசராணையில், இந்த அழைப்பு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரிலிருந்து விடுக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக, மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புக் குழு நடத்திய விசாரணையில், மும்பையில் உள்ள சவுனாபட்டி பகுதியைச் சேர்ந்த கம்ரான் கான் என்பவர் மிரட்டல் விடுத்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் இபிகோ 506 சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அதன்பின்னர் உத்தரப் பிரதேச காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிகார குவியல் இல்லை, அதிகார பரவலே தேவை - மத்திய அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்