ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம் குமார், பல நாட்களாகப் போலி விசா தயாரித்து இளைஞர்களை போர்ச்சுகல் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
அதைப் போல், கேரளாவில் வர்கலா பகுதியைச் சேர்ந்த விவேக், கடக்கவூரைச் சேர்ந்த விஷ்ணு, மூங்கோட்டிலிருந்து அபின் என மூன்று இளைஞர்களிடமும் போர்ச்சுகல் நாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, ஒவ்வொருத்தரிடமும் தனித்தனியாக ரூ. 13 லட்சம் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து, முதல்கட்டமாக மூன்று இளைஞர்களையும் சுற்றுலா விசாவில் ஆர்மீனியாவுக்கு பிரேம் குமார் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு வைத்து இன்னும் 5 லட்சம் கொடுத்தால் தான், போர்ச்சுகல் நாட்டிற்கு அழைத்துச் செல்வேன் எனக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மலேசியா நாட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று, மீதி பணத்தையும் வாங்கி விட்டு தலைமறைவாகியுள்ளார். பின், அவரைத் தொடர்புகொள்ள முயலாமல் பணம் கொடுத்த இளைஞர்கள் தவித்துள்ளனர்.
பின்னர், மூன்று இளைஞர்களும் பண மோசடி செய்ததாக வர்கலா காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் காவல்துறை நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், பிரேம் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'பாஜக போலியாக அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்' - விளாசிய சோனியா காந்தி!