மேற்கு வங்கம் வடக்கு 24 பர்கானா மாவட்டம் கைகட்டா பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த ராம்கிருஷ்ணா சர்க்கார்(27) என்பது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் காவல்துறையினர் ராம்கிருஷ்ணாவின் மனைவி ஸ்வப்னா சர்க்காரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஸ்வப்னாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுஜித் தாஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, திருமணம் தாண்டிய உறவாக மாறியுள்ளது. இதற்கு இடையூறாக இருந்த ராம்கிருஷ்ணாவை கொலை செய்ய, சுஜித் தாஸுடன் இணைந்து ஸ்வப்னா திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, இருவரும் ராம்கிருஷ்ணாவை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அவரின் உடலை சுஜித் தாஸுக்கு சொந்தமான மைதானத்தில் புதைத்துள்ளனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வாரங்கல் படுகொலை; பிகார் தொழிலாளிக்கு மரண தண்டனை விதிப்பு!