கணவரே மனைவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி விபசார தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்.
இது குறித்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நீதிபதி உமேத் சிங், “மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்பதால் அவரை விடுதலை செய்து தீர்பளித்தார்.
மேலும், "பாதிக்கப்பட்ட அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு முன் உயிரிழந்துவிட்டார். அவரை தவிர வேறு முக்கிய சாட்சிகள் இந்த வழக்கில் இல்லை.
குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாடுகளை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை. எனவே அவரை விடுதலை செய்கிறோம்" என்று தீர்பளித்தார்.
பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றம் விளக்கவில்லை. 2011ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் ஆன சில நாள்களிலேயே, மனைவியை அவர் விபசார தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு மனைவி மறுத்தபோது, அவரை கண் மூடித்தனமாக தாக்கியுள்ளார். மேலும், இதற்கு ஒப்புக்கொள்வில்லை என்றால் குடும்பத்துடன் அவரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
2018ஆம் ஆண்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நீதிமன்றம் சார்பில் பலமுறை சம்மன்கள் அனுப்பியும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனால் விசாரணை அலுவலர் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அப்பெண் 2017ஆம் ஆண்டே இறந்துவிட்டதாக பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்!