நாட்டின் முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில்,
"கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருக்க வேண்டும் என்ற யோசனையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்திதான் தெரிவித்தார். இந்த கூட்டணி ஐந்தாண்டுகள் தொடர்வது சந்தேகம்தான்.
கர்நாடகாவின் முதலமைச்சராக்க மல்லிகார்ஜுனா கார்கேவை நான்தான் பரிந்துரைத்தேன். ஆனால் அதனை காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் ஏற்கவில்லை. கூட்டணி ஆட்சி நடத்துவது எவ்வளவு கடினமான செயல் என்பதை நான் அறிவேன். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் காரணமில்லை" எனத் தெரிவித்தார்.