கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள நெடும்பஞ்சேரி விமானநிலையத்தில் இருந்து விமானம் மூலம் வந்த இவர்கள் நேற்றிரவு எர்ணாகுளத்தில் தங்கிவிட்டு பின்னர் சோட்டானிக்கரா கோயிலுக்குச் சென்றனர். அங்கிருந்து குருவாயூர் சென்ற எட்டு பேரும் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட மருத்துவ அலுவலரின் உத்தரவுபடி, சம்பந்தப்பட்ட விடுதிக்கு வந்த நகராட்சி சுகாதார அலுவலர்கள் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தினர். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 8 பேரும் மலேசியாவில் இருந்து வந்தவர்கள் என்றும், இவர்களில் ஆறு பெண்களும், இரண்டு ஆண்களும் அடங்குவர் என்றும் சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுதவிர மூணாறு செல்லும் வழியில் குருவாயூருக்கு வந்த 20 பேர் அடங்கிய குழுவையும், மருத்துவ சுகாதார அலுவலர்கள் சோதனைக்கு உட்படுத்தினர். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளதால், அவர்களுக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என்று சுகாதார அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் குருவாயூருக்கு வந்த 20 பேர் அடங்கிய குழுவினர், இணையதளம் மூலம் விடுதியை முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... கொரோனா வைரஸ் - தடுப்பூசியை உருவாக்க இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் தேவை!