கேரளா மாநிலம் மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த கர்ப்பிணி யானை, அங்கிருந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை சாப்பிட்டது. அப்போது, அதிலிருந்த வெடி வெடித்ததில் யானையின் தாடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் உணவு சாப்பிடமுடியாமல் வலி, வேதனையுடன் சுற்றிய யானை, வெள்ளியாறு ஆற்றில் நின்ற நிலையில் மே 27ஆம் தேதி உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கிராமவாசிகள் சிலர் வெடி மறைத்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை வேண்டுமென்றே யானைக்கு வழங்கியதாகவும், அதை யானை கடித்தபோது வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பிவருகின்றனர்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் மேனா காந்தி, மலப்புரம் வயநாடு தொகுதிக்குள்தான் வருகிறது என்றும் மலப்புரம் மாவட்டத்தில் வினவிலங்கு வேட்டையாடுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதைத் தடுக்க ராகுல் காந்தி என்ன நடவடிக்கை எடுத்தார் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், கேரள வனத்துறை செயலாளரையும் வனத்துறை அமைச்சரையும் நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு எதிராக வெறுப்பு பரப்புரையில் ஈடுபடுவதாக வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் என்பவர் மேனகா காந்தி மீது மலப்புரம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மேனகா காந்தி மீது மலப்புரம் காவல் துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தயாராக இருங்கள், உடனடியாக செயலாற்றுங்கள் - வனவிலங்கு பாதுகாப்பு குறித்து ராகுல் காந்தி