ETV Bharat / bharat

அரசு மருத்துமனையை நம்பாத முதலமைச்சர்: மக்கள் மன்றம் குற்றச்சாட்டு! - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதன் மூலம் அரசு மருத்துவமனை தரமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்துகிறார் என்று மக்கள் மன்றத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

மக்கள் மன்றம் செய்தியாளர்ச் சந்திப்பு
மக்கள் மன்றம் செய்தியாளர்ச் சந்திப்பு
author img

By

Published : Nov 28, 2019, 9:09 PM IST

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காலில் சிறிய அறுவை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் புதுச்சேரி மாநில பெற்றோர் மற்றும் மாணவர் நல சங்கத்தலைவர் நாராயணசாமி, புதுச்சேரி மக்கள் மன்றம் தலைவர் விசிசி நாகராஜன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

மக்கள் மன்றம் செய்தியாளர்ச் சந்திப்பு

அப்போது “புதுச்சேரியில் அரசு மருத்துவம் என்பது ஏழை மக்களுக்கு ஒரு கேள்விக்குறியாக உள்ளது. முதலமைச்சர் மூட்டு அறுவை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவது புதுச்சேரி அரசு மருத்துவமனை தரமான மருத்துவமனை இல்லையா என்ற கேள்வியை மக்களிடையே எழுப்பியுள்ளது” என்றனர்.

இதையும் படிங்க...மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

Intro:முதல்வர் நாராயணசாமி தனியார் மருத்துவமனை சிகிச்சை_ அரசு மருத்துவமனை தரமில்லாத மருத்துவமனை என்பதை மக்களுக்கு முதல்வர் உணர்த்துகிறார் என்று மக்கள் மன்றத்தினர் குற்றச்சாட்டு

Body:புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காலி சிறிய அறுவை சிகிச்சை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்

இந்நிலையில் புதுச்சேரி மாநில பெற்றோர் மற்றும் மாணவர் நல சங்க தலைவர் நாராயணசாமி புதுச்சேரி மக்கள் மன்றம் தலைவர் விசிசி நாகராஜன் நாகராஜன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள்,

புதுச்சேரியில் அரசு மருத்துவம் என்பது ஏழை மக்களுக்கு ஒரு கேள்விக்குறியாக உள்ளது முதல்வர் மூட்டு அறுவை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவது புதுச்சேரி அரசு மருத்துவமனை தரமான மருத்துவமனை இல்லையா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது என்றார்

புதுச்சேரிக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான வசதிகள் இல்லையா அல்லது தரமான மருத்துவர் இல்லையா என்றார்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி கவர்னராக இருந்த ஆளுநர் மல்கானி மற்றும் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்பதை சுட்டிக்காட்டினார் ஆனால் முதல்வர் நாராயணசாமி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை தவிர்த்து உள்ளார் இது அரசு மருத்துவமனை தரமில்லாத மருத்துவமனை என்பதை மக்களுக்கு முதல்வர் உணர்த்துகிறார் என்றார் முதல்வருக்கே சரியான சிகிச்சை அரசு மருத்துவமனையில் இல்லை என்ற நிலையில் ஏழை மக்கள் எப்படி அரசு மருத்துவமனையை நம்பி சிகிச்சைக்கு வருவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்

Conclusion:முதல்வர் நாராயணசாமி தனியார் மருத்துவமனை சிகிச்சை_ அரசு மருத்துவமனை தரமில்லாத மருத்துவமனை என்பதை மக்களுக்கு முதல்வர் உணர்த்துகிறார் என்று மக்கள் மன்றத்தினர் குற்றச்சாட்டு
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.