உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நேரில் சந்தித்தார்.
அப்போது உலக வங்கி ஆண்டுதோறும் ஆறு பில்லியன் டாலர்களை இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வறுமை குறைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு அளித்துவருவது தொடரும் என்று உறுதியளித்தார். மேலும் இந்தியாவின் 97 மக்கள் திட்ட பணிகளுக்கு 24 பில்லியன் டாலர்கள் கடனாக வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உலக வங்கியிடம் எளிமையாக தொழில் செய்யக்கூடிய நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா, 14 இடங்கள் முன்னேறி 63ஆவது இடத்தை அடைந்ததை வரவேற்றார். இதற்கு 'மேக் இன் இந்தியா' உள்ளிட்ட இந்தியாவின் சீர்திருத்த திட்டங்களால் பல வெளிநாட்டு மூதலீடுகளை இந்தியா ஈர்த்தது ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து டேவிட் மால்பாஸ், நாட்டின் நிதித்துறையை வலுபெறச்செய்வது, மக்கள் சேவை திட்டங்கள் உள்ளிட்ட பல வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்தார்.
மேலும் படிக்க: தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 63ஆவது இடத்தில் இந்தியா