ETV Bharat / bharat

பாதுகாப்புத் துறையில் 74% அந்நிய முதலீடு - மத்திய அரசு அறிவிப்பு

மேக் இன் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான அளவை 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

FDI in defence
FDI in defence
author img

By

Published : Sep 18, 2020, 11:19 PM IST

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் விதமாக பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு அளவு 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்தி பாதுகாப்பு தளவாடி தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்கவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனத் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத்துறை சார்ந்த தளவாடங்கள் இறக்குமதி செய்யும் உலக நாடுகளில் இந்தியா முன்னணி இடம் வகிக்கிறது. இந்நிலையில் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தவே இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: 30 ஆண்டுகளாக போராடி 5 கி.மீ. கால்வாய் உருவாக்கிய பிகார் விவசாயி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.