கடந்த ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
அப்போது உத்தரப்பிரதேச மாநில அலிகார் இந்து மகாசபா தேசிய செயலாளரான பூஜா சகுன் பாண்டே தலைமையில் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை மேலானவராக சித்தரித்து, மகாத்மா கோட்சே என்று கோஷமிட்டது மட்டுமின்றி, காந்தியின் உருவபொம்மையை சுட்டனர்.
இந்நிலையில் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது. இதில், காந்தி உருவபொம்மையை அவமதித்த வழக்கில் சம்மந்தப்பட்ட பூஜா சகுன் பாண்டே தலைமறைவான நிலையில், அவரது ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநில அலிகார் காவல் துறையினர், இந்து மகாசபா தேசிய செயலாளரான பூஜா பாண்டே மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டேவை கைது செய்துள்ளனர்.