ETV Bharat / bharat

காந்தியடிகளும்... தேசப் பிரிவினையும்...! - பேராசியர் சமர் தலிவால் கட்டுரை - Gandhi 150

சமூக நல்லிணக்கப் பார்வை, தேசப் பிரிவினை குறித்து காந்தியின் நிலைப்பாடு ஆகியவை குறித்து பேராசிரியர் சமர் தலிவால் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு எழுதிய கட்டுரை இதோ...

Gandhi
author img

By

Published : Sep 9, 2019, 11:45 AM IST

சுதந்திரப் போராட்டத்தின்போது காந்தி தலைமையில் நடைபெற்ற விடுதலை இயக்கத்திற்கு பதிலளிக்க முடியாமல் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் திகைத்தது. போராட்ட வீரர்களின் தொடர் முயற்சியின் காரணமாக வேறுவழியின்றி 1947ஆம் ஆண்டு விடுதலையும் தந்தது. அதேவேளையில் சுதந்திரத்துக்குப் பின் நடைபெற்ற மதக்கலவரம், தேசப்பிரிவினை போன்ற மோசமான நிகழ்வுகளில் சுமார் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். மேலும், 14 லட்சம் பேர் தனது இருப்பிடம் விட்டு வேறு இடத்திற்கு தள்ளப்படும் சூழலுக்கு ஆளாக்கப்பட்டனர்.

மத நல்லிணக்கத்திற்காக நீண்டகாலம் குரல் கொடுத்தவரான காந்தியடிகளை, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணமானவர் எனக் குற்றம்சாட்டிவருகின்றனர். அத்துடன் கோட்சேவை தேசபக்தி கொண்ட வீரராகவும் காந்தியின் கொலையை நியாயப்படுத்தும் செயலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. காந்தி நினைத்தால் தேசப் பிரிவினையைத் தடுத்து மதக்கலவரம் நேராமல் தவிர்த்திருக்க முடியும் எனப் பலர் இன்றளவும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

Gandhi
பயணத்தின்போது காந்தி

இந்தக் கேள்விகளுக்கான பதிலை வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றின்படி ஆராய்ந்தால் அதற்கான விடை கிடைக்கலாம். 1919ஆம் ஆண்டு காலகட்டத்தில் காங்கிரஸ் நடத்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் இஸ்லாமிய சமூகத்தினரும் இணைவதற்கு காந்தி வழிவகுத்தார். கிலாபத் இயக்கத்தை முன்னின்று நடத்தி இஸ்லாமியச் சமூகத்தை விடுதலை போராட்டத்தின் மையப்பகுதியில் இணையவைத்தார். போராட்டம் வலுவடைந்து சுதந்திரம் கைகூடிய காலகட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் என்ற இரு நாட்டுக்கொள்கையை ஜின்னா கையிலெடுத்தார். சுதந்திரம் அடைந்தபின் இஸ்லாமியர்களுக்கான இடம் இந்தியாவில் மறுக்கப்படும் என்றார். தனது அரசியல் சுயலாபத்திற்காக இது போன்ற அச்ச உணர்வையும் பிரிவினை கருத்துகளையும் தொடர்ச்சியாக முன்வைத்தார் ஜின்னா.

ஆனால் காந்தியோ பிரிவினை கருத்துக்கு உடன்படாமல் விடாப்பிடியாக நின்றார். பிரிவினை என்பது வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டு வன்முறையில் முடியும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார் காந்தி.

Gandhi
பொதுக்கூட்டத்தில் காந்தியடிகள்

மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்களைப் போல இஸ்லாமிய மக்களும் உரிமைகளைக் கொண்டவர்கள் எனவும் தன்முனைப்புமிக்கவர்கள் எனவும் தெரிவித்தார். 'இந்தியா என்ற நாட்டில் கூட்டுக்குடும்பமாக வாழும் மக்கள் அனைவரும் சமமானவர்களே!' என்றார் காந்தி. ஆனால் 1945ஆம் ஆண்டுக்குப்பின் இரு தரப்புக்கும் இடையேயான வெறுப்புணர்வு அதிகரிக்கவே வன்முறை உச்சத்தைத் தொட்டது. ஒற்றுமை-பிரிவினையைத் தாண்டி மனித உயிர்களின் மதிப்பே உயர்ந்தது என்னும் உயிர் நேயக் கொள்கை கொண்ட காந்தி தேசப்பிரிவினை என்ற கசப்பான முடிவை ஏற்றுக்கொண்டார்.

அதன்பின் தனது இறுதி மூச்சுவரை இரு சமூகத்திற்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்தார். 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மதவெறியின் குண்டுகளுக்கே இரையானார் காந்தி. பிரிவினைக்கும் மதக்கலவரத்திற்கும் காந்தியைக் காரணம் கூறுபவர்கள், அவர் மறைந்து, சுமார் 70 ஆண்டுகளாகியும் வெறுப்புணர்வு மேலும் அதிகரித்துள்ளது என்பதையும் நோக்க வேண்டும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.