ETV Bharat / bharat

#MAHARASTRAPOLITICS LIVE: மகாராஷ்டிரா அரசியல் திருப்பங்கள் உடனுக்குடன்

author img

By

Published : Nov 23, 2019, 10:32 AM IST

Updated : Nov 24, 2019, 12:44 PM IST

Maharastra

12:29 November 24

பெரும்பான்மைக்கான ஆதரவு கடித்தை ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். நாளை காலை 10.30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைத் தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

12:22 November 24

முகுல் ரோத்தகி, பாஜக சார்பு வழக்கறிஞர் : பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி, 17 நாட்களாகியும் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் ஆட்சியமைக்க முடியவில்லை. எனவே பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியதும் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஆளுநரின் இம்முடிவில் நீதித்துறை தலையிட முடியாது என வாதிட்டார்.

12:05 November 24

அபிஷேக் மனு சிங்வி, காங்கிரஸ் சார்பு வழக்கறிஞர்: காங்கிரஸ் சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, அஜித் பவார் தந்த தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநர் சரி பார்க்கவில்லை எனவும், பெரும்பான்மை குறித்த முடிவை ஆளுநர் எவ்வாறு முடிவு செய்தார் எனக் கேள்வி எழுப்பினார். எம்.எல்.ஏ-க்களின் குதிரை பேரத்தை தடுக்க நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

12:04 November 24

கபில் சிபில், சிவசேனா சார்பு வழக்கறிஞர்: வழக்கு தொடர்பாக சிவசேனா சார்பில் ஆஜரான கபில் சிபில், மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது ஜனநாயக விரோதமான செயல் எனவும், பெரும்பான்மை உள்ள சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அனுமதித்துள்ளார் என வாதத்தை முன்வைத்தார். அரசு உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென வாதத்தை தெரிவித்தார்.

11:31 November 24

அசோக் சவான், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர்:  தேசிய வாத காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தை அஜீத் பவார் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான அசோக் சவான் தெரிவித்துள்ளார். சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியிடம் பெரும்பாண்மை உள்ளது எனவும் கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

11:15 November 24

நீதிபதிகள் உச்ச நீதிமன்றம் வருகை: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு எதிராக சிவசேனா தொடர்ந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தடைந்தனர். நீதிபதி என்.வி ராமண்ணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்ஹா ஆகியோர் இவ்வழக்கை விசாரிக்கவுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

10:36 November 24

சஞ்சய் ககாடே, பாஜக மக்களவை உறுப்பினர்: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் தொடர்ந்துவரும் நிலையில், பாஜக மக்களவை உறுப்பினர் சஞ்சய் ககாடே தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் ககாடே, தனிப்பட்ட விஷயம் காரணமாக இச்சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்தார்.

10:26 November 24

சரத் பவார் வீட்டில் பாஜக எம்.பி சஞ்சய் ககாடே

உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசியல் களம்: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த வழக்கு இன்று காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு வருகிறது. சிவசேனா சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜராகிறார். மகாராஷ்டிரா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகிறார். தேசியவாத காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகிறார். மத்திய அரசு சார்பில் சேலிசிடேட் ஜெனரல் ஏ.சி. வேணுகோபால் ஆஜராகிறார்.

23:32 November 23

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பவாயில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிவசேனா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மும்பையில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

21:51 November 23

49 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் - தேசியவாத காங்கிரஸ்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் 49 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. பவாயில் உள்ள விடுதியில் இவர்கள் தங்கவைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

21:39 November 23

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்ததற்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளவுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி ஞாயிற்றுகிழமை என்றபோதிலும் உச்ச நீதிமன்றம் நாளை காலை 11:30 மணிக்கு விசாரிக்கவுள்ளது. 

21:24 November 23

எம்.எம்.ஏ.க்களை விடுதிக்கு அழைத்துச் செல்ல பேருந்து வரவழைக்கப்பட்டது!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுக் கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர்களை விடுதிக்கு அழைத்துச் செல்ல பேருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. 

20:55 November 23

நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடத்த வேண்டும் - காங்கிரஸ் 

மகாராஷ்டிராவின் அரசியல் குழப்பம் குறித்த வழக்கை இன்று இரவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை கேட்டுகொண்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

20:35 November 23

அனைத்தும் கட்டுக்குள் உள்ளது - சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழு கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து,  அனைத்தும் கட்டுக்குள் உள்ளதாக அக்கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் அஜித் பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

20:19 November 23

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஜெயந்த் பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்டதால், இந்த மாற்றத்தை அந்தக் கட்சி மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவந்தபோது, இவர்  அமைச்சராக செயல்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது. 

19:56 November 23

சரத் பவார் பேட்டி

விசாரணை அமைப்புகளுக்கு பயந்து அஜித் பவார் இந்த முடிவை எடுத்தாரா? என்பது எனக்கு தெரியாது.!
அஜித் பவாருடன் சென்ற 11 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 3 பேர் இங்கு வந்துள்ளனர்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது.

19:09 November 23

19:09 November 23

மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றதை எதிர்த்து சிவசேனா தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

18:43 November 23

பாஜகவின் வலையில் 9 எம்.எல்.ஏ.க்கள்?

டெல்லிக்குச் சென்ற தேதியவாத காங்கிரஸ் கட்சியின் 9 எம்.எல்.ஏ.க்கள் பாஜக உத்தரவின்படி நடந்துவருவதாக கூறப்படுகிறது.

18:36 November 23

ஒப்பந்த அடிப்படையில் ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்கிறது - காங்கிரஸ் கடும் விமர்சனம்

காங்கிரஸ் சார்பில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, "மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்திருப்பது சட்டவிரோதமானது. ஒப்பந்த அடிப்படையில் பாஜக ஜனநாயகத்தை படுகொலை செய்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மிரட்டப்பட்டுள்ளார். அவர் ஒரு சந்தர்ப்பவாதி. பாஜகவுக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்துள்ளார்கள் என்பதை ஆளுநர் ஆராயவில்லை. அஜித் பவாரை சிறையில் அடைப்பேன் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அவரை துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் ஆக்கியுள்ளார்" என்றார். 

18:31 November 23

அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மொத்தமாக 54 எம்.எல்.ஏ.க்களில் 42 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

18:14 November 23

பாஜக அசுத்தமான அரசியல் செய்கிறது - ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், "பாஜக அசுத்தமான அரசியல் செய்கிறது. அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டிய ஆளுநர் ஒரு சார்புடன் செயல்பட்டுள்ளார். பாஜகவுடன் சேர்ந்து ஆளுநர் சதி வேலையில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடி, அமித் ஷா ஆலோசனையின் படியே ஆளுநர் நடந்துள்ளார்" என்றார். 

18:14 November 23

நமது கனவு நிறைவேறும் - உத்தவ் தாக்கரே

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இடையிலான கூட்டத்தில் உத்தவ் தாக்கரே, "பொறுத்திருங்கள், நமது கனவு நிறைவேறும். மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்கும் என கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

18:04 November 23

சரத் பவாருக்கு பெருகும் ஆதரவு!

பாஜகவுடன் கைகோர்த்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. தனஞ்செய் முண்டே, சரத் பவாரின் அழைப்பை ஏற்று அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளார். 

17:52 November 23

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்து கொண்டிருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையை வைத்தே பாஜக ஆட்சி மகாராஷ்டிராவில் நிலைக்குமா அல்லது முடிவுக்கு வருமா என்பது தெரியவரும். 

17:29 November 23

உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.எல்.ஏக்களை சந்திக்க விடுதிக்கு சென்றுள்ளார்.

17:15 November 23

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள், அஜித் பவாரை சமாதானப்படுத்த சென்றுள்ளனர். எம்.பி. சுனில் தட்கரே, எம்.எல்.ஏ.க்கள் திலீப் வால்சே பாட்டில், ஹசன் முஸ்ரிப் ஆகியோர் அஜித் பவாரிடம் ஆலோசனை நடத்திவருகின்றனர். சரத் பவாருடன் மீண்டும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

சரத் பவாரின் மகளும், மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சூல், குடும்பமும், கட்சியும் உடைக்கப்பட்டுவிட்டதாக தனது வாட்ஸ்அப் பதிவில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

16:57 November 23

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அஜித் பவாரிடம் 35 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவே வெற்றிபெறும். ஆனால், சரத் பவார் சொன்னபடி, அவரிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இருந்தால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தோல்வி அடைவது உறுதி. 

16:48 November 23

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 அதிருப்தி எம்.எல்.ஏக்களை பாஜக தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

16:31 November 23

காங்கிரஸ் தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

16:26 November 23

ரவிசங்கர் பிரசாத், மத்திய அமைச்சர்: செய்தியாளர்களை சந்தித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், 'மகாராஷ்டிரா மாநில தேர்தலில் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெற்றி பெறவே மக்கள் வாக்களித்தனர். ஊழலற்ற ஆட்சி நடத்தியதால் எங்களுக்கு வெற்றியை தந்த மக்களின் முடிவை சிவசேனா மீறி செயல்படுகிறது. இந்தியாவின் பொருளாதார தலைநகர் மும்பை. இதை முடக்கவே பாஜகவை ஆட்சியமைக்கவிடாமல் இதுபோன்ற அரசியலில் ஈடுபடுகின்றனர். பால் தக்கரே கொள்கைகளிலிருந்து சிவசேனா விலகிச்சென்றுள்ளது. சிவாஜி பற்றி பேச சிவசேனாவுக்கு தகுதியில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

15:53 November 23

நிதின் கட்கரி, மத்திய அமைச்சர்: மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த நிதின் கட்கரி, 'கிரிக்கெட்டிலும், அரசியலிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதன் அர்த்தம் இப்போது உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார். 

15:44 November 23

15:15 November 23

14:46 November 23

14:26 November 23

மகாராஷ்டிரா காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நிறைவு:  மகாராஷ்டிரா அரசியல் திருப்பங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபலுடன் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவு. சரத் பவார் - உத்தவ் தாக்கரே நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தரப்பு பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல். 

13:00 November 23

12:56 November 23

திக்விஜய் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்த விதம் அரசியல் சாசனத்தை கேலிக் கூத்தாக்கும் செயல், அஜித் பவாரின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒத்துழைக்கமாட்டார்கள் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

12:30 November 23

தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அஜித் பவார் நீக்கம்? உத்தவ் தாக்கரே, ஆதித்தியா தாக்கரேவுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே சந்திப்பு. அஜித் பவாரை நீக்கும் முடிவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எடுக்கவுள்ளதாக தகவல்..

12:30 November 23

சஞ்சய் நிருபம், மகாராஷ்டிரா காங்கிரஸின் மூத்த தலைவர்: காங்கிரஸ் கட்சி சிவசேனாவுடன் கூட்டு வைக்க நினைத்தது தவறு எனவும் மகாராஷ்டிரா காங்கிஸ் காரிய கமிட்டியை இடைக்காலத் தலைவர் உடனடியாகக் கலைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் சஞ்சய் நிருபம்.

12:15 November 23

ராமதாஸ், பாமக நிறுவனத் தலைவர்: மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது சந்தர்ப்பவாத அரசியல்  'மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி.காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!'.

11:59 November 23

சுப்ரியா சூலே, சரத் பவாரின் மகள்: கட்சியும் குடும்பமும் உடைந்தது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரின் மகள் சுப்ரியா சூலே தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார்.

நவாப் மாலிக், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்: இன்று மாலை 4:30 மணிக்கு  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏக்களின் கையெழுத்து தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் குற்றச்சாட்டு.

11:37 November 23

ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு துணை முதலமைச்சர்: மகாராஷ்டிராவில் அமைந்துள்ள புதிய ஆட்சிக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தேவேந்திர ஃபட்னாவிஸூக்கும், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அஜித் பவாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! மகாராஷ்டிராவின் நீடித்த, நிலையான வளர்ச்சிக்கு உழைத்திட எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் ஓ.பி.எஸ்.

11:31 November 23

ராமதாஸ் ட்விட்டர் பதிவு
ராமதாஸ் ட்விட்டர் பதிவு

10:45 AM: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவர் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மத்தியம் 12:30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து மகாராஷ்டிர அரசியல் திருப்பம் குறித்து கருத்து தெரிவிக்கவுள்ளனர்.

11:00 November 23

சுப்ரியா சூலே ஸ்டேட்டஸ்
சுப்ரியா சூலே ஸ்டேட்டஸ்

10:30 AM: கிரீஷ் மகாஜன், மகாராஷ்டிரா பாஜக மூத்த தலைவர்: எங்களிடம் 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. சட்டப்பேரவையில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்.

10:53 November 23

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ட்விட்டர் பதிவு

9:50 AM: சஞ்சய் ராவத், சிவசேனா: மகாராஷ்டிரா மக்களின் முதுகில் குத்திவிட்டார் அஜித் பவார். சரத் பவாரும் உத்தவ் தாக்கரேவும் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். அஜித் பவாரின் முடிவு தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல. உத்தவ் தாக்கரே, சரத் பவார் இன்று மீண்டும் சந்திக்கவுள்ளனர்.

10:52 November 23

9: 40 AM: சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்: பாஜக அரசுடன் கைகோர்த்தது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்ற முடிவை எடுக்கவில்லை. இந்தக் கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடையாது.

10:52 November 23

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்.

10:52 November 23

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்.

10:52 November 23

மிலன்ந் தியோரா ட்வீட்
மிலன்ந் தியோரா ட்வீட்

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்.

09:49 November 23

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக தலைமையிலான அரசு ஆட்சியமைத்து தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அதிரடி திருப்பங்கள் கொண்ட மகாராஷ்டிரா அரசியல் களச்சூழலின் நேரலை தகவல்கள் உடனுக்குடன் ஈடிவி பாரத் செய்திகளில்.

Intro:Body:

MaharashtraPolitics

Conclusion:
Last Updated : Nov 24, 2019, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.