மகாரஷ்ட்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மீது ஐ.எல் அண்ட் எஃப்.எஸ் என்ற நிறுவன முதலீடு தொடர்பாக பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விசாரணைக்காக இன்று அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜராகுமாறு ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு ராஜ் தாக்கரே ஆஜாராவார் என அக்ககட்சி அறிவித்தது. இந்நிலையில் ராஜ் தாக்கரே அமலாக்கத்துறை அலுவலகம் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.