ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - Maharashtra lockdown

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மே மாதம் 31ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

Maharashtra
Maharashtra
author img

By

Published : May 17, 2020, 4:55 PM IST

இந்தியாவில் கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று முடிவடையவுள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் அவர்களின் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பை பொறுத்து நான்காம் கட்டமாக ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.

அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மே மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், நான்காவது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும் என்றும், பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் அதிகப்படியான தளர்வுகள் இருக்கும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றால் அதிகப்படியான பாதிப்பைச் சந்தித்துள்ள மகாராஷ்டிராவில் 30 ஆயிரத்து 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,088 பேர் குணமடைந்துள்ளனர். 1,135 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.