கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 64 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கர்நாடகா, டெல்லியில் தலா ஒருவர் கொரோனா பெருந்தொற்று வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், மூன்றாவதாக 64 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 120 பேர் கொரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகப்படியாக 36 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக கேரளா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இந்தியாவில் மூன்றாவது நபர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: கார்கிலில் 144 தடை உத்தரவு