மகாராஷ்டிரா பொதுப்பணித் துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவானுக்கு கடந்த மாதம் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மே 25ஆம் தேதி மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீவிர சிக்கிசைக்கு பின், கரோனாவிலிருந்து குணமடைந்த அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அசோக் சவான் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரா முதலமைச்சராகவும் பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மகாராஷ்டிராவின் வீட்டுவசதித் துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜிதேந்திர அவாத்துக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சில நாள்களுக்கு முன்னர்தான் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. அங்கு இதுவரை 74,860 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2,587 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தொடரும் சிக்கல்!