ETV Bharat / bharat

நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் அடுத்த தலைவர் யார்? - நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத் தலைவர்

நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்திற்கான 2020-23ஆம் ஆண்டிற்கான தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த இந்திய நாடாளுமன்றத்தின் 206ஆவது அமர்வில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்.

LS Speaker participates in Governing council meet of IPU

author img

By

Published : Nov 2, 2020, 12:19 PM IST

டெல்லி: ஸ்விட்சர்லாந்திலுள்ள ஜெனிவாவில் 1889ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம். இது உலக நாடுகளில் உள்ள நாடாளுமன்றங்களை ஒன்றிணைத்து ஜனநாயக ஆட்சி, உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, பாலின சமத்துவம், இளைஞர்களின் அரசியல் பங்கீடு, நாடுகளின் நிதி நிலைமை உள்ளிட்ட பல முக்கிய விவாதங்களை முன்வைக்கிறது.

இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவர் பதவி நடப்பாண்டில் முடிவடைய உள்ளதால், தற்போது தேர்தல் நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டு கால தலைவர் பதவிக்காக போர்ச்சுகலைச் சேர்ந்த டுவர்டே பச்சேகோ, பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது சஞ்சிரானி, உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அக்மல் சைடோவ், கனடாவைச் சேர்ந்த சல்மா அதாவுல்லாஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தல் குறித்த இந்திய நாடாளுமன்றத்தின் 206ஆவது அமர்வில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றுள்ளார். காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கிய இந்த அமர்வு வரும் நான்காம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 144 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.