ETV Bharat / bharat

எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை அடுத்த மாதம் குறையும் : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

ராய்பூர் : எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை அடுத்த மாதம் குறையும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Dharmendra Pradhan
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
author img

By

Published : Feb 20, 2020, 9:27 PM IST

சட்டீஸ்கருக்கு இரண்டு நாள் பயணம் சென்றுள்ள மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: எல்.பி.ஜி சிலிண்டர்களின் விலை தொடர்ச்சியாக உயர்வதாக சொல்லப்படுவது உண்மையில்லை. இந்த மாதம் அதன் விலையேற்றத்திற்கு காரணம் சர்வதேச சந்தையே. அடுத்த மாதம் இந்த விலையேற்றங்கள் மாற்றங்களை சந்தித்து, விலை வெகுவாக குறையும்.

குளிர்காலத்தை முன்னிட்டு எல்.பி.ஜி.யின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதுவே, அந்த துறையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் அதிகரித்த விலை அடுத்தமாதம் குறையும். சர்வதே சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கேற்ப கடந்த வாரம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நூற்று நாற்பத்து நான்காக (ரூ. 144.5) உயர்ந்தது. இருப்பினும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களுக்கு இரட்டை மானியம் வழங்கப்படுகிறது, என்றார்.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் ஸ்டீல் ஆலையில் தர்மேந்திர பிரதான் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, அவருடன் ஸ்டீல் பிளாண்ட் அலுவலர்கள், யூனியன் நிர்வாகிகள் உள்ளிட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளது. இதனுடன் பலோட் மாவட்டத்தில் உள்ள தல்லிராஜ்ஹராவில் பிலாய் ஸ்டீல் ஆலையினுடைய இரும்பு தாதுக்களை பார்வையிடவுள்ளார்.

இந்த ஆலை குறித்து மத்திய அமைச்சர் பேசுகையில், “ பி.எஸ்.பி இந்திய நாட்டில் மிக முக்கியமான ஸ்டீல் தொழிற்சாலை. குறிப்பாக, இந்திய ரெயில்வேக்கு 98 சதவீதம் கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் பி.எஸ்.பிக்கு உள்ளது. இந்த மேற்பார்வையிடலின் போது அதை இன்னும் மேம்படுத்தும் வழிகள், உற்பத்தி திறன் பெருக்குதல் குறித்து கலந்தாலோசிப்பேன்”, என்றார்.

ரயில்வேக்கு தேவையான தண்டவாளங்கள், கனரக எஃகு தகடுகள் மற்றும் கட்டமைப்பு எஃகு உள்பட ரெயில்வெக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் இந்தியாவின் ஒரே நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களைச் சந்திக்கும் மெலனியா ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.