டெல்லி: அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை சனிக்கிழமையன்று (அக்.17) மேலும் தீவிரமடைந்தது. எனினும், இந்திய கடற்கரை பகுதிகளிலிருந்து விலகி செல்கிறது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து அதன் பின்னர் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.
இந்திய கடற்கரையிலிருந்து விலகிச் செல்ல வாய்ப்புள்ளதால், இந்த முறை எந்தவொரு மோசமான தாக்கத்தையும் மேற்கு கடற்கரையில் ஏற்படுத்த வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மத்திய மற்றும் வடக்கு அரேபிய கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கரையோர மாவட்டங்களான சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகவே, இன்று கிழக்கு மற்றும் அருகிலுள்ள வடகிழக்கு அரேபிய கடல் பகுதிகளிலும், நாளை (அக்.18) மத்திய மற்றும் வடமேற்கு அரேபிய கடல் மீதும் கடல் நிலைமைகள் மிகவும் கடினமானதாக இருக்கும்.
இந்த வார தொடக்கத்தில் ஆந்திரா மாநில கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவியது. இதனால், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா (வடக்கு), மகாராஷ்டிரா மற்றும் கோவா உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: வெள்ளத்தில் மிதந்த தெலங்கானா; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது!