ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்நாட்டின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட அவர், இன்று (செப்.16) முறைப்படி பதவியேற்றார். இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். புதிய பிரதமர் சுகாவுடன் இணைந்து செயலாற்றி இரு நாட்டு உறவுகளையும் புதிய உச்சத்திற்கு கொண்டுச் செல்ல விரும்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்.
-
Heartiest congratulations to Excellency Yoshihide Suga on the appointment as Prime Minister of Japan @kantei. I look forward to jointly taking our Special Strategic and Global Partnership to new heights. @sugawitter
— Narendra Modi (@narendramodi) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Heartiest congratulations to Excellency Yoshihide Suga on the appointment as Prime Minister of Japan @kantei. I look forward to jointly taking our Special Strategic and Global Partnership to new heights. @sugawitter
— Narendra Modi (@narendramodi) September 16, 2020Heartiest congratulations to Excellency Yoshihide Suga on the appointment as Prime Minister of Japan @kantei. I look forward to jointly taking our Special Strategic and Global Partnership to new heights. @sugawitter
— Narendra Modi (@narendramodi) September 16, 2020
இரு நாடுகளும் சீனாவுடன் தற்போது மோதல் போக்கை கடைபிடித்துவரும் நிலையில், இந்தியா-ஜப்பான் உறவு சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியா வரும் விஜயநகர கால ராமர், சீதை, லட்சுமணரின் சிலைகள்!