ETV Bharat / bharat

20 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை-மகனை இணைத்த ஊரடங்கு - 20 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை-மகனை இணைத்த ஊரடங்கு

சண்டிகர்: மகனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியதந்தை ஊரடங்கு உத்தரவினால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறையினரால் மீண்டும் தனது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

Lockdown unites estranged son and father after 20 years

author img

By

Published : May 6, 2020, 11:08 AM IST

ஹரியானா மாநிலம் குருக்சேத்ரா மாநகரம், பஞ்ச்கோத்ரா பகுதியைச் சேர்ந்தவர் சோட்டு ராம். இவர் கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு தனது மூத்த மகனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்டப்பட்டுள்ளதால், சாலையோரங்களில் வசிப்பவர்கள், வெளியில் தங்கியுள்ள முதியவர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை சேகரித்து காவல் துறையினர் அவர்களது குடும்பத்திற்கும், ஆதரவற்றவர்களுக்கான இல்லங்களுக்கும் அனுப்பிவைத்துவருகின்றனர்.

அந்தச் சமயத்தில், சாத்சங் பவனில் தங்கியிருந்த சோட்டு ராமை விசாரித்த காவல் துறையினர் அவரை மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து பேசிய சோட்டு ராம், நான் ஹரியானா மாநிலம் அம்பலா மாவட்டத்திலுள்ள பஞ்ச்கோத்ரா பகுதியில் வசித்து வந்தேன். என்னுடைய மூத்த மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினேன்.

பின்னர், பல்வேறு ஆன்மீக வழிபாட்டு தலங்களுக்கு சென்று அறிவுரைகளைக் கேட்ட பின்பு, கோயில்களிலும், வழிபாட்டு தலங்களிலும், புனித பயணம் மேற்கொள்பவர்களுடனும் தங்கி பயணிக்கத் தொடங்கினேன். ஊரடங்கினால் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அடையாளம் காணப்பட்டு மீண்டும் எனது வீட்டிற்கு திரும்பினேன் எனக்கூறினார்.

இதுகுறித்து பேசிய காவலர் சுபாஷ் சந்த், ஊரடங்கு உத்தரவினால் சாலையோரங்களில் தங்கியுள்ளவர்கள் குறித்த விசாரணையின்போது சோட்டா ராம் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தோம். அவர் குறித்த தகவல்களை முன்னதாகவே அறிந்திருந்தோம். 20 வருடங்களுக்கு முன்பு அவரது மகன் தந்தையை காணவில்லை என்று புகாரளித்திருந்ததும் நினைவிற்கு வந்தது. சோட்டா ராமின் முழு விவரங்களையும் விசாரித்து மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தோம் என்றார்.

இதையடுத்து, கரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் இருபது வருடங்கள் கழித்து மீண்டும் முதியவர் ஒருவர் குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கில் மட்டும் 315 குடும்ப வன்முறை புகார்கள் - அதிர்ச்சியில் தேசியப் பெண்கள் ஆணையம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.