கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், சுப நிகழ்ச்சிகளில் இருபது பேருக்கு மேல் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முன்னதாகவே உறுதி செய்யப்பட்ட திருமணங்களை மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியைச் சேர்ந்த இம்ரானுக்கும், கோப்பல் பகுதியைச் சேரந்த தாஜ்மா பேகத்திற்கும் குடும்பத்தினர், ஜமாஅத் அமைப்பினர் முன்னிலையில் அவர்களது வீட்டிலிருந்தபடியே வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடத்தி வைத்தனர்.
தங்களது முறைப்படி, ஊரடங்கு முடிந்த பிறகு மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்துவருவோம் என மணமகனின் சகோதரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் தொற்று காரணமாக கபசுரக் குடிநீருடன் நடந்த இஸ்லாமிய திருமணம்