இதுகுறித்து ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் கூறுகையில், '' எல்லை தாண்டிய வர்த்தகம் தொடர்பான வழக்கில் என்ஐஏ அலுவலர்கள் காஷ்மீரின் பல்வேறு பகுதிகள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின்போது, முகமது இக்பால் லோன் மற்றும் குர்ஷீத் அஹ்மத் லோன் ஆகியோரின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
எல்லை தாண்டிய வர்த்தக வழக்கு தொடர்பாக என்ஐஏ பல வர்த்தகர்களின் குடியிருப்புகளில் சோதனைகள் மேற்கொண்ட இரண்டு நாள்களுக்குப் பிறகு மீண்டும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதில் பாராமுல்லாவில் வசித்து வரும் வர்த்தகரான பீர் அர்ஷித் இக்பால் என்பவர் போதைப்பொருள் வழக்கில் கத்துவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் பாராமுல்லாவில் வசிக்கும் ஷேக் சகோதரர்கள் மற்றும் ஹமீது சகோதரர்கள் ஆகியோரும் போதைப்பொருள் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே என்ஐஏ அலுவலர்கள் பஷீர் அஹமத் சோஃபி, அப்துல் ஹமீது லோன் ஆகிய வர்த்தகர்கள் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புற்றுநோயாளிக்களுக்காக தலைமுடியை அளித்த குஜராத் சிறுமி..!