பிகார் மாநிலம் கயா மாவட்டத்தின் பன்கி பாசார் பகுதியைச் சேர்ந்தவர் லோங்கி மஞ்சி. வேளாண்மை செய்துவரும் இவர், அப்பகுதியின் பசான தேவைக்காக கால்வாய் ஒன்றை உருவாக்க தனிநபராக களமிறங்கியுள்ளார். 30 ஆண்டுகாலம் போராடி 5 கி.மீ. பரப்பளவில் கால்வாய் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
இந்த விவரம் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வானுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அக்கட்சி உறுப்பினர் மூலம் மஞ்சியை கௌரவித்து ரூ.51,000 பரிசுத் தொகையும் வழங்கியுள்ளார் பாஸ்வான்.
இது குறித்து மஞ்சி பேசுகையில், தான் எந்தவித பரிசையும் எதிர்பார்த்து இந்தப் பணியை செய்யவில்லை எனவும், கிராம மக்களின் பாசன தேவைக்காக மழைநீரை சேமிக்கும் நோக்கிலேயே இந்தக் கால்வாயை வடிவமைத்தாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் பாம்பினால் கடிபடுபவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு மூன்றாம் இடம்!