நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசாம், பிகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பிகாரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளதில் மூழ்கியுள்ளன.
இன்றுவரை பிகாரில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மதுபனி, சிவான் ஆகிய பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதால், இந்த பகுதிகளை ஒட்டியுள்ள 71 கிராமங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.
மாநிலம் முழுவதும் மொத்தம் 39.63 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 உயிரிழப்புகள் ஏற்படுள்ளன. அரசு மேற்கொண்டுள்ள மீட்பு பணி மூலம் 3.16 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த 21 தனிப்படைகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதையும் படிங்க: மாயாவதி மீது அசோக் கெலாட் குற்றச்சாட்டு