வடமாநிலங்களில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை உள்ளிட்ட மாதங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். வெப்பக் காற்று காரணமாக மக்கள் தங்களின் துணியால் முகத்தை மூடிக்கொள்வார்கள். அந்தக் காலங்களில் அவர்கள் பெரும்பாலும் லிச்சி பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள்.
அதற்கேற்றார் போல் இந்த லிச்சிப் பழங்களும் சந்தையில் விலை மலிவாக கிடைக்கும். ஆனால் நடப்பாண்டில் நிலைமை தலைகீழாக உள்ளது. லிச்சிப் பழங்கள் விளைச்சல் பெருமளவு இருந்தும், கரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது பழத்தை சந்தைப்படுத்தவும் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் பழத்தை வாங்கி விற்பனை செய்யவும் வியாபாரிகள் தயாரில்லை. இதனால் லிச்சி பழ உற்பத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒட்டுமொத்த பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர்.
மாநிலங்களின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், லிச்சி பழங்களின் ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் விவசாயிகளின் துயரங்களை மேலும் அதிகரிக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக லிச்சியை நம்பியிருக்கிறார்கள். இந்த கரோனா ஊரடங்கு அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும், வேலையின்மையையும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு விதிமீறல்: பாஜக பெண் எம்.பி.க்கு அபராதம்!