ETV Bharat / bharat

மதுபானக் கடைகள் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி!

author img

By

Published : Oct 1, 2020, 10:28 AM IST

புதுச்சேரி: நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு மற்றும் தளர்வுகள் அறிவித்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மத்திய அரசு பல்வேறு தரவுகளுடன் ஊரடங்கு அறிவித்த நிலையில்,மாவட்ட ஆட்சியர் அருண் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதுபானக் கடை
மதுபானக் கடை

அதில், “தற்போது ஊரடங்கு தளர்வு களத்தில் பல்வேறு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் புதுச்சேரியில் பொது முடக்கத்துடன் கூடிய தளர்வு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு 5ஆம்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். மாணவர்கள் சந்தேகம் இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் வரலாம். அதேபோன்று 9ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 12ஆம்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளம், சினிமா திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடனும், பொழுதுப்போக்கு பூங்காக்கள், சுற்றுலாத்தளங்கள் ஆகியவை வரும் 15ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகள் மற்றும் தனியார் அலுவலங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி. உணவங்களில் மட்டும் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடவும், 10 மணி வரை பார்சல் வினியோகம் செய்ய அனுமதி.

மேலும் மதுபானக்கடைகள், மற்றும் அமர்ந்து சாப்பிடும் மதுபானக்கூடங்களுக்கு கலால் விதிமுறைகள்படி இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடற்கரை சாலைகளில் இரவு 9 மணிவரை நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.