ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ரக்கா கிராமத்தில் வயல்வெளியில் பணிபுரிந்தபோது மின்னல் தாக்கியதில், 30 வயது பெண் ஒருவர் தனது 12 வயது மகனுடன் உயிரிழந்தார்.
அதேபோல், தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள விரம்தாத் கிராமத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இதையடுத்து போதாட் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் ஐந்து வயது சிறுவன், 60 வயது முதியவர், 17 வயது பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அருகே உள்ள மருத்துவமனைகளில் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டன. தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளதால், குஜராத், பிகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட், சவுராஷ்டிரா, ஜாம் நகர், கிர் சோம்நாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் பிகாரில் மின்னல் தாக்கி 100 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.