ETV Bharat / bharat

பிகாரின் ஆறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Jul 9, 2020, 3:01 PM IST

பிகாரின் ஆறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி, உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என நிதீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

lightning-kills-12-people-in-bihar-cm-announces-rs-4-lakh-each-for-kin-of-deceased

பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் "மாநிலத்தின் 6 மாவட்டங்களில் 12 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். மோசமான காலநிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலாண்மைத் துறையால் அவ்வப்போது வெளியிடப்பட்ட பரிந்துரைகளைப் பின்பற்றவும், மோசமான வானிலை நிலவுதால் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருங்கள் ' என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும், மாவட்டங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழந்தனர். இவர்களில், பெகுசாரையில் ஏழு பேர், பாகல்பூர், பாங்கா, முங்கர், கைமூர், ஜமுய் மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் பாட்னா, போஜ்பூர், வைசாலி, நாலந்தா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, ஜூலை 2ஆம் தேதி, பிகார் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் தனித்தனி மின்னல் தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர். ஜூலை 3ஆம் தேதி, பிகார் முழுவதும் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்தனர். ஜூலை 4ஆம் தேதி, பிகாரில் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடியுடன் கூடிய மழை பெய்ததால் பலர் காயமடைந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.